‘போர்க்களம்’ என்ற தனது முதல் திரைப்படத்தின் மிரட்டலான மேக்கிங் மூலம் ஒட்டு மொத்த கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தவர், பத்திரிகையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர் பண்டி சரோஜ்குமார்.
அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்கள் கண் சிமிட்டாமல் பார்க்கக்கூடிய விதத்தில் இருந்ததோடு, விறுவிறுப்பான திரைக்கதையோடு மிகப்பெரிய ஆக்ஷன் படமாகவும் இருந்தது.
அப்போது அந்த படத்தை பார்த்த பலர் இயக்குநர் பண்டி சரோஜ்குமார், மிகப்பெரிய இயக்குநராக உருவெடுப்பார் என்று பாராட்டினார்கள்.
அதையடுத்து இயக்குநர் பண்டி சரோஜ்குமாரின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு ‘கலை எனது, விலை உனது’ என்ற கருத்தோடு டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியான ‘மாங்கல்யம்’ என்ற திரைப்படத்தை இயக்கியதோடு, நடிகராகவும் அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.
இப்போது பண்டி ராஜ்குமார் ‘பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்’ நிறுவனம் சார்பில் புதிய படமொன்றை தயாரித்து, இயக்கி நடிப்பதோடு, இசை, படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் கவனிக்கிறார். படத்திற்கு ‘பராக்ரமம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு, I ME MYSELF என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. படத்தில் அனாமிகா, கிரிட்டி, மோகன் சேனாபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
படம் பற்றி பண்டி சரோஜ்குமாரிடம் கேட்டபோது, ‘‘மதுரையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த துரைராஜா என்கின்ற இளைஞனின் வாழ்க்கையில் உள்ளூர் கிரிக்கெட், காதல், நாடக வாழ்க்கை மற்றும் அரசியல் ஆகியவை எப்படிப்பட்ட பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பது படத்தின் முக்கிய கதையம்சம்.
இளைஞர்களை அனைத்து விதத்திலும் என்டர்டெயின் செய்யும் விதமாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு திரையரங்கிற்கு வந்து பார்க்கக்கூடிய படமாக இருக்கும்.
படத்தை இயக்கி, தயாரித்து, நாயகனாக நடிப்பதோடு, இசை மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் செய்யப் போகிறேன். பல திறமையான புதுமுக நடிகர், நடிகைகள் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்” என்றார்.
தற்போது படத்தின் முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர், வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கி, அக்டோபர் மாதத்திற்குள் இரண்டு கட்டங்களாக 30 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து, அடுத்த வருடம் பிப்ரவரி 14-ம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
பாடல்கள் – சசாங் வெண்ணெலகண்டி லைன் புரொடியூசர் – பிரவீன் குதூரி
விஎப்.எக்ஸ் – அயேக்ரா ஸ்டுடியோஸ் கலை இயக்கம் – கிரிட்டி முசி
ஒலி வடிவமைப்பு, மிக்ஸிங் – காளி எஸ்.ஆர்.அசோக்
தயாரிப்பு நிர்வாகி – மனராஜு புகைப்படக் கலைஞர் – நவீன் கல்யாண்
மக்கள் தொடர்பு – ஹஸ்வத் சரவணன்