தற்கொலைக்கு முயற்சி செய்பவனின் மனம் மாறும் கதைக்களத்தில் ‘பேச்சு’ குறும்படம். ‘ஒன்றாக’ நிறுவனம் வெளியிடுகிறது.

தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒருவன் அழைக்கப்படாத விருந்தாளியால் மனதை மாற்றிக் கொள்கிறான். இப்படியான கதைக்களத்தில் உருவாகியுள்ளது ‘பேச்சு’ குறும்படம்.

மலையாளத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும், பன்முக ஆளுமையுமான நோபல் பாபு தாமஸ், இந்த குறும்படத்தைத் தயாரித்து, கதை, வசனம் எழுதியுள்ளார்.

பாலிவுட் இயக்குநர் அபயின் முன்னாள் உதவி இயக்குநர் அலிஷா பத்லானி இந்த குறும்படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சார்லி பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.

‘ஒரு எளிய உரையாடல் ஒரு உயிரைக் காப்பாற்றும்’ என்ற வலுவான செய்தியை செல்வதே, கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் நோக்கம்.

படத்திற்கு வாசிம் அஷ்ரஃப் இசையமைக்க, விஷ்ணு டி.ஆர் ஒளிப்பதிவு செய்கிறார், சங்கீத் பிரதாப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தை ஒன்றாக என்டர்டெயின்மென்ட் (Ondraga Entertainment) வெளியிடுகிறது.

தென்னிந்தியாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Ondraga Entertainment, நம்பிக்கைக்குரிய திறமையாளர்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல சுயாதீன பாடல்கள் மற்றும் குறும்படங்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களின் சமீபத்திய வெளியீடுகளான முத்த பிச்சை (இந்தப் பாடலை இசையமைத்து, பாடி, இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன்), எரிமலையின் மகளே (கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையில் பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்), Tour De Kollywood & Offscreen with Ondraga ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில்‘பேச்சு’ இணைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here