தணிக்கை குழு வியந்து பாராட்டிய ‘பரிவர்த்தனை’ செப்டம்பர் 8 தியேட்டர்களில் ரிலீஸ்!

தணிக்கை குழுவினர் நிறைவுக் காட்சியை வியந்து பாராட்டிய படம் ‘பரிவர்த்தனை.’ காதலின் அழகிய தருணங்களை காட்சிப்படுத்தும் இந்த படத்தை ‘வெத்து வேட்டு, ‘தி பெட், ‘பேட்டரி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.படம் வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படம் பற்றி இயக்குநர் மணிபாரதி பேசியபோது, ‘‘காதல் எப்போது வரும் எவர் மீது வரும் என்பது இப்போதுவரை எவருக்குமே தெரியவில்லை. அந்த மாயவலையில் சிக்கிக்கொண்டவர்களின் மனநிலை பற்றியதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

நம் வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்கள் எதுவென்றால் அது காதல் காலங்கள்தான். அந்த அழகிய தருணங்களை அதன் இயல்புகலோடு படமாக்கியிருக்கிறோம்.

மட்டுமல்லாது கடந்த சில வருடங்களாக சாதிய வன்மங்களையும், போதைப் பழக்கவழக்கங்களை மட்டுமே பேசி கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கு மத்தியில் காதலையும் காதல் சார்ந்து ஏற்படக் கூடிய மன உணர்வுகளையும் மட்டுமே இப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறோம்.

இப்படி காதலும் காதல் சார்ந்துமே உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு உயிர்கொடுக்கும் விதமாக நாயகன் நாயகியாக சின்னத்திரை நட்சத்திரங்கள் சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி நடிக்க, மூன்று காலகட்டங்களாக வரும் இப்படத்தில் பருவ வயதினராக மோகித், ஸ்மேகா, சிறு வயதினராக விதுன், ஹாசினி நடித்துள்ளனர். கூடவே தேவிப்ரியா, பாரதிமோகன், திவ்யாஸ்ரீதர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தினை மெருகேற்றும் விதமாக காட்சிகள் முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் தென்பகுதியான புளியஞ்சோலையில் படமாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இறுதி காட்சியை வியந்து பாராட்டினார்கள்” என்றார்.

உருவாக்கத்தில் உறுதுணை:-

ஒருங்கிணைப்பு, இணைஇயக்கம் – இளமாறன்வேணு
ஒளிப்பதிவு – கோகுல்
இசை – ரஷாந்த் அர்வின்
எடிட்டிங் – ரோலக்ஸ்
நடனம் – தீனா,
பாடல்கள் – விஜெபி ரகுபதி
மக்கள் தொடர்பு – மணவை புவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here