சுரேஷ் ரவி – யோகிபாபு இணையும் காமெடி படத்தின் படப்பிடிப்பு உற்சாகமாக தொடங்கியது!

நகரத்து வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம் பிடித்துக் காட்டும் விதத்தில் காமெடி சப்ஜெக்டில் உருவாகும் புதிய படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். தீபா பாலு, பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ், கருணாகரன், வேல ராமமூர்த்தி ஆதித்யா கதிர் அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். கே. பாலையா இயக்கும் இந்த படத்தின் பூஜை கடந்த வாரம் நடந்தது. அதையடுத்து காரைக்குடியில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தொடர்ந்து தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை என பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்திற்கு தற்காலிகமாக Production No. 2′ என தலைப்பிடப்பட்டுள்ளது.

படத்தை பி ஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் சார்பில் பாஸ்கரன்.பி., ராஜபாண்டியன்.பி இணைந்து தயாரிக்கின்றனர்.

சுரேஷ் ரவி ஹீரோவாக நடித்த காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தை பி ஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் தயாரித்தது. அந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரீதியாக தரமான திரைப்படம் என பெரியளவில் பாராட்டுக்களை குவித்தது. அதே தயாரிப்பு நிறுவனமும் நடிகர் சுரேஷ் ரவியும் இரண்டாவது முறையாக இணைகின்றனர்.

படக்குழு:-
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
இசை – என் ஆர் ரகுநந்தன்
படத்தொகுப்பு – தினேஷ் போனுராஜ்
கலை – சிஎஸ் பாலச்சந்தர்
ஆடை வடிவமைப்பாளர் – சத்யா என் ஜே
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here