விமல், சூரி நடிக்கும் ‘படவா’ தேசிய விருது பெற்ற ‘கடைசி விவசாயி’ போன்ற படமாக இருக்கும்! -இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

நடிகர்கள் விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ள படம் ‘படவா.’ ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ ராம் வில்லனாகவும் அவர்களோடு தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர், சரவண சக்தி, சாம் என 40க்கும் மேற்பட்டோர் நடித்துள்ளனர். படத்தை கே.வி. நந்தா இயக்கியுள்ளார்.

‘ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல்’ ஜான் பீட்டர் தயாரித்து, இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஜய் ஆண்டனி பேசியபோது, ‘‘கதாநாயகன் விமல் நடிகர் சூரி சார் காம்போ நன்றாக இருக்கும். இது கட்டாயம் நல்ல திரைப்படமாக அமையும்” என்றார்.

இயக்குந‌ர் பேரரசு பேசியபோது, ‘‘ ‘கடைசி விவசாயி’ தேசிய விருது பெற்றது. படவா டிரைய்லரை பார்க்கும் போது ‘கடைசி விவசாயி’ போன்ற படமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது” என்றார்.

கதாநாயகன் விமல், கதாநாயகி ஸ்ரீதா, இந்த படத்தின் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான ஜான் பீட்டர், பாடலாசிரியர் இளையகம்பன், கலை இயக்குநர் சரவண அபிராமன், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இயக்குந‌ர் சரவணன் சக்தி, நடிகர் சவுந்தர்ராஜா, பாடகர் வேல்முருகன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க‌ செயலாளர் கதிரேசன், பாடகி ரதீ சங்கர் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

படத்தின் இயக்குநர் தன் தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

உருவாக்கத்தில் உறுதுணை:-
பாடல்கள் – வைரமுத்து, விவேகா, கபிலன் , இளையகம்பன், ஸ்வர்ணலதா, ஜான் பீட்டர்
கலை இயக்கம் – சரவண அபிராமன்
படத்தொகுப்பு – வினோத் கண்ணா
சண்டைக்காட்சி – சிறுத்தை கணேஷ்
நடனம் – தினேஷ், ஸ்ரீதர், தினா
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here