ஹாரர் திரில்லர் சப்ஜெக்டில் உருவாகும் ‘பூங்கா நகரம்’ படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்ட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்!

தமன் குமார் கதாநாயகனாக, ஸ்வேதா டோரத்தி கதாநாயகியாக நடிக்கும் படம் ‘பூங்கா நகரம்.’

ஹாரர் த்ரில்லர் சப்ஜெக்டில், நகைச்சுவை கலந்த திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈ.கே.முருகன், திருவண்ணாமலையை கதைக்களமாக கொண்ட இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தை ‘அக்க்ஷயா மூவி மேக்கர்ஸ்’ நடராஜ் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் முதல் தோற்றத்தை (First Look) இயக்குநர் கேஎஸ்.ரவிக்குமார் 18.9.2023 விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார்.

அதை தொடர்ந்து படத்தின் இரண்டாவது தோற்றத்தை படக்குழு வெளியிட்டு படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு – பாண்டியன் குப்பன்
இசை – ஹமரா சி.வி.
பாடல்கள் – நா.ராசா
எடிட்டிங் – சி.எம். இளங்கோவன்
நடனம் – ராபர்ட் மாஸ்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here