மம்மூட்டி நடிக்க, ராகுல் சதாசிவன் எழுதி இயக்கிய படம் ‘பிரம்மயுகம்.’ இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி கொச்சியிலுள்ள ஒட்டப்பாலத்தில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் இன்று (19.9.2023) மம்மூட்டிக்கான காட்சிகள் நிறைவடைந்தது.
நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோருடன் படப்பிடிப்பு தொடரவிருக்கிறது. முழு படப்பிடிப்பும் அக்டோபர் இரண்டாவது வாரத்துக்குள் நிறைவடையும்.
படத்தை ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ சக்ரவர்த்தி ராமச்சந்திரா, ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ எஸ். சஷிகாந்த் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படம் அடுத்தாண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.
படக்குழு:-
ஒளிப்பதிவு – ஷெஹ்னாத் ஜலால்
இசை – கிறிஸ்டோ சேவியர்
வசனம் – டிடி ராமகிருஷ்ணன்
தயாரிப்பு வடிவமைப்பு – ஜோதிஷ் சங்கர்
எடிட்டர் – ஷபீக் முகமது அலி
மேக்கப் – ரோனெக்ஸ் சேவியர்
காஸ்ட்யூம்ஸ் – மெல்வி ஜே