ஹார்ட் அட்டாக் குறித்து விழிப்புணர்வூட்ட ரூ 1 1/2 லட்சம் ரொக்கப் பரிசோடு பிரசாந்த் மருத்துவமனை நடத்திய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டி! வெற்றியாளர்களுக்கு நடிகர் விக்ரம் பிரபு பரிசு வழங்கி வாழ்த்து!

சென்னை: அக்டோபர் 21, 2023:  சென்னை மாநகரில் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக சேவையாற்றி வரும் பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ், இளம் இதயங்களை காப்போம் (‘Save Young Hearts’) 2023 டிஜிட்டல் பரப்புரை செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது.  மாரடைப்புகள், இதய பிரச்சனைகள்,  வராமல் தடுக்க இளம் தலைமுறையினர் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் வகையில், இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்புடுத்தும் விதமாக 2022-ம்  ஆண்டில் Save Young Hearts’ பெயரில் நடத்தப்பட்ட வெற்றிகரமான பரப்புரை செயல்திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இதனை பிரசாந்த்மருத்துவமனை நடத்தியது.  மொத்தத்தில் இப்போட்டிக்கு 100-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.

மிகச் சிறப்பான முதல் இரண்டு படைப்புகளுக்கு தலா ருபாய் ஒரு லட்சம் மற்றும் ஐம்பது ஆயிரம் வழங்கினர். பிரபல தமிழ் நடிகர் விக்ரம் பிரபு, இந்நிகழ்வின் விருந்தினராக கலந்து கொண்டு ‘இளம் இதயங்களை காப்போம்’ என்ற செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட சிறிய வீடியோ (Insta Reels) போட்டியில் பங்கேற்றவர்களையும் மற்றும் விருதுகளை வென்றவர்களையும் மனமார பாராட்டினார்.  இதய ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துவதிலும் மற்றும் இதயத்திற்கு நலமளிக்கும் வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் படைப்பாக்கத் திறனுடன் போட்டியாளர்கள் வழங்கிய சிறப்பான பங்களிப்புகளை அவர் மனமார பாராட்டி கௌரவித்தார்.

சமீப காலங்களில், இளவயது நபர்கள் மத்தியில் “இதயம் தொடர்பான நோய்” (கார்டியாக் அரெஸ்ட்) அதிகம் ஏற்படுவதால், அவற்றின் தீவிரத்தை உணர்த்துவதற்கு மருத்துவ நிபுணர்களின் கருத்துகளும், தெளிவாகவும் விளக்கினர். இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை உருவாக்குவதற்கு இன்ஸ்ட்ராகிராம் தளத்தில் நடைபெற்ற இப்போட்டி, எண்ணற்றோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அதிகரித்து வரும் இதயநோய்கள் மற்றும் சிக்கல்களை மனதில் பதியுமாறு அழகாக சித்தரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் மீதான முக்கியத் தகவலை பிரமாதமாக வெளிப்படுத்தியிருந்த சிவமணி கண்ணன் என்ற சாதனையாளருக்கு ரூ. 1 இலட்சம் என்ற சிறப்பான ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.  இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்தடுப்பு நடவடிக்கைகள் மீது சிறப்பான வீடியோவை உருவாக்கியதற்காக ஜீவன் என்ற நபருக்குஇரண்டாவது பரிசான ரூ.50,000 என்ற ரொக்கத்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்வில் சென்னை, பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா, பேசியபோது, அதிகரித்த விழிப்புணர்வும், வாழ்க்கைமுறை மாற்றங்களுமே மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு முக்கிய வழிமுறைகளாக இருக்கின்றன.  இளம் நபர்களோடும் மற்றும் பரந்து விரிந்த சமூக ஊடக சமுதாயத்தினரை தொடர்புகொண்டு விழிப்புணர்வை அதிகரிப்பதே இதற்கான உகந்த வழிமுறையாகும். இப்போட்டியை நடத்துவதன் மூலம் இதயம் தொடர்பான நோய் நிகழாமல் தடுப்பது மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை செயல்படுத்துவது என்ற செய்தியினை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதே எமது நோக்கமாகும். இப்பரப்புரை செயல்திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து பெறும் வரவேற்பு மற்றும் புகழ்பெற்ற இன்ஃபுளூயன்சர்களிடமிருந்து கிடைத்த பிரமாண்டமான ஆதரவு எங்களுக்கு பெரும்கிழ்ச்சியளிக்கிறது.” என்று கூறினார்.

பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் முதுநிலை இதயவியல் நிபுணர் டாக்டர். கதிரேசன், “ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும். தொழில்முறை அமைப்புகளும் அரசாங்கமும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலம் மக்கள் சுற்றுச்சூழலிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர் .மாரடைப்பு, கைகள் மற்றும் தோள்களில் வலி, இதயம் அல்லது சுவாசத்தில் அசௌகரியம் போன்ற இதய சிக்கல்களின் சிறிய அறிகுறிகளை நாம் எதிர்கொள்ளும்போது உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.இச்செயல்திட்டத்தின் மாபெரும் நிறைவு விழா, சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் கிரெஸ்ட் கிளப் அமைவிடத்தில் நடைபெற்றது.  மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுப்பது மீது சிறப்பு கவனம் செலுத்துகின்ற விவாதங்கள், திறந்த நிலை கலந்துரையாடல்கள், படைப்பாக்கத் திறனுடன் பகிர்வுகள் ஆகியவற்றிற்கான ஒரு செயல்தளமாக “Save Young Hearts Reels Contest” செயலாற்றியது.

பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் குறித்து: பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் என்பது, தொழில்முறைநிபுணத்துவமும், பயிற்சியும் பெற்ற நிபுணர்களைக் கொண்டு நவீன, உயர்தர உடல்நல சிகிச்சைசேவைகளை வழங்குகின்ற பன்முக சிறப்பு பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரபல மருத்துவமனையாகும். 

சென்னையில், வேளச்சேரி மற்றும் கொளத்தூர் ஆகிய இடங்களில்அமைந்துள்ள பிரசாந்த் சூப்பர் – ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இம்மாநகரில் சிறந்த சிகிச்சைக்குசிறப்பாக அறியப்படும் மல்ட்டி – ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுள் ஒன்றாகும். நோயாளிகளுக்குசிறப்பான உடல்நல பராமரிப்பை வழங்க நன்கு பயிற்சியளிக்கப்பட்ட திறன்கொண்ட செவிலியர்கள்இம்மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர்.  நோயாளிகளுக்கு மிக நேர்த்தியான உடல்நல பராமரிப்பு சேவைகளை வழங்குவதன் மூலம்சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிலையமாக உருவாவதே இதன் தொலைநோக்கு திட்டமாகவும், குறிக்கோளாகவும் இருக்கிறது. சிறந்த, தரமான சிகிச்சையை வழங்குவதன் மூலம் நோயாளிகளின்நம்பிக்கையை பெறுவது இம்மருத்துவமனை குழுமத்தின் செயல் இலக்காக இருக்கிறது.தரமான சிகிச்சைபராமரிப்பு, மரியாதை, உயர் செயல்திறன், சிகிச்சையின் பயனளிக்கும் தன்மை, பாதுகாப்பு, மக்கள் மத்தியில் ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வை உருவாக்குவது ஆகிய மதிப்பீடுகளைச்சார்ந்தே பிரசாந்த் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  எந்தவொரு நோய் பாதிப்பிற்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள்நோயறிதல்களுக்கும் மற்றும் அவைகளுக்குரிய சிகிச்சைகளுக்கும்பல்வேறு ஆரோக்கிய பராமரிப்பு தொகுப்பு திட்டங்களையும் பிரசாந்த் சூப்பர் – ஸ்பெஷாலிட்டிஹாஸ்பிட்டல்ஸ் வழங்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here