Home சினிமா கிராமத்து வீடு, வளர்ப்புப் பிராணிகள், கர்ப்பிணி மனைவியை அணைத்திருக்கும் கதைநாயகன்… அப்புக்குட்டி நடிக்கும் ‘பிறந்த நாள்...

கிராமத்து வீடு, வளர்ப்புப் பிராணிகள், கர்ப்பிணி மனைவியை அணைத்திருக்கும் கதைநாயகன்… அப்புக்குட்டி நடிக்கும் ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ ஃபர்ஸ்ட் லுக்கில் கவனம் ஈர்க்கும் அம்சங்கள்!

அப்புகுட்டி நடித்துள்ள ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ திரைப்படத்தை கிராமத்துப் பின்னணியில் அழுத்தமான சமூகக் கருத்துடன், வித்தியாசமான ஃபேண்டஸி டிராமாவாக இயக்கியுள்ளார் ராஜு சந்ரா. மலையாளத்தில் இரண்டு படங்கள் இயக்கிய ராஜு சந்ராவின் முதல் தமிழ்ப் படம் இது.

இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது. அதையடுத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பொங்கல் வாழ்த்துக்களுடன் வெளியிட்டுள்ளது படக்குழு.

அதில் கிராமத்து வீட்டுப் பின்னணியில், கதைநாயகன் அப்புகுட்டி கர்ப்பிணி மனைவியை அணைத்தபடி இருப்பது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தேசியவிருது நாயகன் அப்புக்குட்டி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டாக்டர் உட்பட பல வெற்றிப் படங்களில், குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த ஸ்ரீஜாரவி, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா அனில்குமார், ரோஜி மாத்யூ, சந்தோஷ் சுவாமிநாதன், ஈஸ்வரி, நீலா கருணாகரன், ,சுல்பியா மஜீத், இன்பரசு, ராகேந்து, விஷ்ணு, வேல்முருகன், ருக்மணி பாபு, வினு அச்சுதன், பக்தவல்சலன், அமித் மாதவன், விபின் தேவ், வினீத் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு பொள்ளாச்சி, ஆழியார் டேம், கேரளாவிலுள்ள வாகமன் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. பட வெளியீட்டுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

படக் குழு:-
கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் – ராஜுசந்ரா
தயாரிப்பு – Plan3 Studios
இணை தயாரிப்பு – MATHENS GROUP
இசை – ஜி கே வி, நவனீத்
எடிட்டர் – தாஹிர் ஹம்சா
இணை இயக்குநர் – பினு பாலன்
கலை இயக்கம் – வினோத் குமார்
உடை வடிவமைப்பு – சுல்பியா மஜீத், பக்தவச்சலன்
நடனம் – சதீஷ்
மக்கள் தொடர்பு – வேலு

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்