விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், சசிகுமார்,  லிங்குசாமி… அப்புக்குட்டி நடிக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’படத்தின் முன்னோட்டத்தை இணைந்து வெளியிட்ட பிரபலங்கள்!

கிராமிய பின்னணியில் யதார்த்தமான படைப்பாக தயாராகியிருக்கிறது தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்ற திரைப்படம்.

இந்த படத்தின் முன்னோட்டத்தை திரைப் பிரபலங்கள் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், சசிகுமார்,  லிங்குசாமி, சீனு ராமசாமி, கௌதம் வாசுதேவ் மேனன், சுசீந்திரன், நட்டி நட்ராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் இணைய பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜு சந்ரா இயக்கியுள்ள இந்த படம் வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தில் அப்புக்குட்டியோடு ஸ்ரீஜா ரவி, ஐஸ்வர்யா அனில் குமார், ரோஜி மேத்யூ, சந்தோஷ் சுவாமிநாதன், ஈஸ்வரி, லீலாவதி கருணாகரன், விஷ்ணு, வேல்முருகன், ருக்மணி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”குடிப் பழக்கத்திற்கு அடிமையான எளிய கிராமத்து மக்களின் வாழ்வியல் தொடர்பான சம்பவங்களை தழுவி இப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஜனரஞ்சகமாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும் தயாராகி இருக்கிறது” என்றார்.

முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும், பாடலும் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

இந்தபடத்தை பிளான் 3 ஸ்டுடியோஸ் மற்றும் மாதன்ஸ் குரூப் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரோஜி மேத்யூ மற்றும் ராஜூ சந்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜு சந்ரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி கே வி- நவ்னீத் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.  படத்தொகுப்பு பணிகளை தாஹிர் ஹம்சா மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத்குமார் கவனித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here