அறிமுக இயக்குனர் எஸ்.லாவண்யா இயக்கி, சினிமா துறையின் 32 துறைகளையும் கையாண்டு உருவாக்கிய ‘பேய் கொட்டு’ திரைப்படம் மார்ச் 21 முதல் உலகமெங்கும் ரிலீஸாகிறது.
லாவண்யா கதையின் நாயகியாக நடிக்க, தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
10க்கும் மேற்பட்ட உலக சாதனைகளை எட்டியுள்ள இந்த படத்திற்கு ஏராளமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
லாவண்யா தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், பைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எப் எக்ஸ், வி எப் எக்ஸ், எஸ் எப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன் உள்ளிட்ட 32 கிராப்டுகளையும் சுயமாக கற்று பேய் கொட்டு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.