அரசியல் களத்தில் நகைச்சுவை கலந்த ‘பேரில்லூர் பிரிமியர் லீக்’ மலையாள வெப் சீரிஸ்! ஜனவரி 5-ம் தேதியிலிருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்.

அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் வெப் சீரிஸ் ‘பேரில்லூர் பிரிமியர் லீக்.’

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மூன்றாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் இது. இந்த சீரிஸ் வரும் ஜனவரி 05, 2024 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

சீரிஸில் நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன் இந்த சீரிஸில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். புகழ் பெற்ற இயக்குநர் பிரவீன் சந்திரன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இந்த சீரிஸின் டிரெய்லர் வெளியானது. அது ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கும் விதத்தில் இருந்தது.

சீரிஸ் பற்றிய கூடுதல் தகவல்கள்:
தீபு பிரதீப் இந்த சீரிஸை எழுதியுள்ளார்.
E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும் CV சாரதி தயாரித்துள்ளார்.
முஜீப் மஜீதின் இசை சீரிஸை மெருகேற்றுகிறது.
ஒளிப்பதிவு இயக்குநரான அனூப் வி ஷைலஜா, கிராமப்புற கேரளாவின் சாரத்தை அசத்தலான காட்சிகளுடன் படம்பிடித்துள்ளார்.
பவன் ஸ்ரீ குமாரின் தலைசிறந்த எடிட்டிங் கதையை திரையில் அழகாக உயிர்ப்பிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here