இயக்குநருக்கு தங்க வளையம் அணிவித்த ஹரிஷ் கல்யாண்! -‘பார்க்கிங்’ படத்தின் வெற்றி விழாவில் உற்சாகம்

ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வெளியாகி பெரியளவில் வெற்றி பெற்ற ‘பார்க்கிங்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து உற்சாகப்படுத்தினார்.

அதையடுத்து நிகழ்வில் பேசிய ஹரிஷ் கல்யாண், “பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம்குமார் நிச்சயம் இருப்பார். இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது” என்றார்.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “மீடியா கொடுத்த பாசிடிவ் ரிவியூவால்தான் மக்கள் நிறைய பேரிடம் இந்தப் படம் போய் சேர்ந்தது. வெள்ளம், மழை என நிறைய இடையூறுகள் இருந்தாலும் இந்தப் படத்திற்கு மக்கள் நிறைய ஆதரவு கொடுத்து வருகிறார்கள்” என்றார்.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “இந்தப் படத்தை சரியான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்தினருக்கு நன்றி. சில படங்கள் ஆரம்பத்தில் டல்லாக இருக்கும், போகப் போக பிக்கப் ஆகும். வீட்டுக்குள் இருக்கும் பிரச்சினையை நல்ல விதமாக படமாக்கியுள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் எல்லோருடைய ஒத்துழைப்புக்கும் வெற்றிக் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி” என்றார்.

நடிகை இந்துஜா, இந்த படம் நடிக்கும்போது நல்ல படம் செய்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தது. நீங்கள் கொடுத்த அன்பு இன்னும் நல்ல படங்கள் அடுத்து செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொடுத்திருக்கிறது. மழை என்பதையும் தாண்டி மக்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நிகழ்வில் நடிகர் சுரேஷ், நடிகை பிரார்த்தனா, இணைத் தயாரிப்பாளர் சினிஸ், காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி உள்ளிட்டோரும் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here