ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் முன்னணி பாத்திரங்களில் நடிக்க, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய படம் ‘பார்க்கிங்.’
சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி மக்களிடம் பெரியளவில் வரவேற்பு பெற்ற இந்த படத்தை, வரும் டிசம்பர் 30 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளிக்கலாம்.
அழுத்தமான கதை இந்த படத்தின் பலம்.
தங்கள் வசிப்பிடத்தின் முன் வாகனம் நிறுத்தும் இடத்திற்காக சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு மனிதர்களைச் சுற்றி நிகழும் சண்டை சச்சரவுகளை மையப்படுத்திய பரபரப்பான காட்சிகளுடன் படத்தின் கதை நகரும்.
மக்களில் பலரும் தங்கள் வாழ்வில் நிச்சயம் பார்க்கிங் பிரச்சனையை சந்தித்திருப்பார்கள் என்பதால் படத்தின் காட்சிகள் அவர்களின் அனுபவங்களை நினைவுபடுத்தும்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
இசை: சாம் சி எஸ்.
ஒளிப்பதிவு: ஜிஜு சன்னி
எடிட்டிங்: பிலோமின் ராஜ்
கலை இயக்கம்: என்.கே. ராகுல்