‘என்னங்க சார் உங்க சட்டம்’ பட இயக்குநர் பிரபு ஜெயராம் திருமணத்தில் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து!

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கி, அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை காட்சிப்படுத்தி, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரமான கருத்துகளையும் தைரியமாகப் பேசி கவனம் ஈர்த்தவர் பிரபு ஜெயராம்.

இப்போது பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.

எம்.இ. முடித்துவிட்டு கல்லூரி ஒன்றில் புரொஃபசராக பணியாற்றி வரும் தீபாவுடன் இவருக்குத் திருமணம் சென்னை வடபழனியில் கடந்த ஞாயிறன்று இனிதே நடந்தது.

நிகழ்வில் நடிகர்கள் அருண் பாண்டியன், விஜய் ஆண்டனி, வடிவுக்கரசி, மன்சூர் அலிகான் மற்றும் இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சரண் என ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here