பிரபலங்கள் பகிர்ந்த கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக்… பிரபுதேவாவின் அதிரடி நடனத்தில் மீண்டும் ‘பேட்டராப்.’

‘இந்திய மைக்கேல் ஜாக்சன்’ நடனப் புயல் பிரபுதேவாவின் அதிரடி நடனத்தில், 90களில் இளைஞர்களை ஆடவைத்த ‘பேட்டராப்’ பாடலை மறக்க முடியாது.

அதே பிரபுதேவாவின் அதிரடி நடனத்தில் எஸ் ஜெ சீனு (S J Sinu) இயக்கத்தில் ‘பேட்டராப்’ என்ற பெயரிலேயே ஒரு திரைப்படம் பிரமாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை காதலர் தினமான இன்று பிரபலங்கள் தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

அந்த உற்சாகத்தோடு, படம் குறித்து பேசிய இயக்குநர், ”பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் வேதிகா, பிரபு தேவாவுடன் போட்டி போட்டு நடனத்தில் கலக்கியிருக்கிறார். இமான் இசையில் பத்து பாடல்கள் ரசிகர்களை திரையரங்குகளில் ஆடவைக்கும். குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இளைஞர்களின் படமாகவும் வருகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here