பிரதீப் ரங்கநாதனை மீண்டும் கதாநாயகனாக்கிய ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட்… தயாராகிறது ‘லவ் டுடே’ கூட்டணியின் அடுத்த படம்!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் அந்த படத்தை தயாரித்திருந்தது. தற்போது அதே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இந்த புதிய படத்தை ‘ஓ மை கடவுளே’ புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள, இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இது ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் 26-வது படைப்பாகும்.

புதிய படத்தை அறிவிப்பதற்காக காணொலி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்துவின் நிஜ வாழ்க்கை நட்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள நகைச்சுவை ததும்பும் இந்த வீடியோ, வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

கலகலப்பு மிக்க, உணர்ச்சிப்பூர்வமான இந்த படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி படம் பற்றி பேசியபோது, “‘லவ் டுடே’ படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிரதீப் ரங்கநாதனையும், ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஷ்வத் மாரிமுத்துவையும் இணைப்பதில் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மகிழ்ச்சி அடைகிறது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்று ஏஜிஏஸ் நிறுவனத்தின் வெற்றிப்பட வரிசையில் இடம் பிடிக்கும்” என்றார்.

படக்குழு:-
இணை கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஐஷ்வர்யா கல்பாத்தி
இசை: லியோன் ஜேம்ஸ்
ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி
படத்தொகுப்பு: பிரதீப் ஈ. ராகவ்
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ்.எம். வெங்கட் மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here