இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சென்னை சாலிகிராமத்தில் துவங்கி வைத்த பத்மம் சைவ உணவகம்!

பத்மம் சைவ உணவகம் சென்னை தி.நகரில் தொடங்கி அசத்தலான சுவையினால் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. அதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் இரண்டாம் கிளையை ஏப்ரல் 26; 2024 அன்று பத்மம் உணவக நிர்வாக குழுவினரோடு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

சைவ விருந்துக்கு ஆசைப்படுபவர்களை மட்டும் அல்ல விருந்துணவு என்றாலே சென்னைவாசிகள் இனி பத்மம் உணவை நாடிவருவார்கள் என்று உறுதியளிக்கிறார்கள் பத்மம் உணவக நிர்வாகத்தினர்.

பத்மம் உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் தென்னிந்திய சுவைகளை நாவுக்கு அளிக்கின்றன. பல்வேறு சைவ உணவுகளின் சுவைகள் நமது பாரம்பரியமான சமையலை நினைவூட்டுகின்றன. மேலும் இந்த சமையல் தயாரிப்புகளுக்கான பொருள்களும் பெறப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப சுவையான தயாரித்து வழங்குவதில் சுகாதாரமும் தரமும் முதன்மையாக பின்பற்றப்படுகிறது. தரமானதாக சுகாதாரமான முறையில் உணவு

திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பத்மம் உணவகத்தை திறந்து வைத்து பேசிய போது.. “சாலிகிராமம் என்றாலே ஸ்டுடியோக்களின் நினைவு தான் வருகிறது. இந்த இடத்தில் பத்மம் உணவகம் அமைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. சமீபகாலமாக மக்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள். தரமான உணவுகளை நாடுகிறார்கள். அந்த வகையில் சைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். படைப்பாளிகளும் தனித்துவமான பாணியை பின்பற்ற விரும்புவது போன்று சுவையான படைப்புகளுடன் கொண்டுள்ள சைவ வகை உணவுகளுக்கு மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.

அதற்கேற்ப 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் பத்மம் உணவகம் சுற்றுப்புறம் பாரம்பரியமும் நவீனமும் கலந்து மனதுக்கு மகிழ்ச்சியான இணக்கமான கலவையை பிரதிபலிக்கிறது. பத்மம் உணவகம் சைவ உணவு உண்பவர்களுக்கு உண்மையான விருந்தாக இருக்கும்.

சிறப்பு உணவுகள்

மசாலா மென்மையான வெஜ் இடியாப்ப பிரியாணி என்பது சுவைகளின் கலவை. நறுமணம் கொண்டுள்ள பொருள்கள் சேர்க்கப்பட்டு முறையில் தயாரிக்கப்படும் இடியாப்ப வகை பிரியாணி. சைவ உணவு உண்பவர்களும் சுவையான கலவையில் பிரியாணியை சாப்பிடலாம் என்பதை உணரவைக்கும் அருமையான டிஷ் இது.

ஆந்திராவில் எம்எல்ஏ பெசரட்டு

பாசிப்பருப்பு தோசையில் உப்புமாவுடன் பரிமாறப்படும் பிரபலமான உணவு பெசரட்டு . பத்மம் உணவகம் மற்ற மாநிலங்களின் பிரசித்தி பெற்ற உணவுகளிலும் தனது கவனத்தை செலுத்திவருகிறது என்பதை இது காட்டுகிறது. மிருதுவான சுவையான இந்த பெசரட்டு பாசிப்பயறில் செய்யப்படுகிறது. இதன் உள் வைக்கும் உப்புமா இன்னும் சுவையானது, இந்த தோசை தென்னிந்திய உணவு வகை தோசையில் அனைவருக்கும் பிடித்தமானது.

பத்மம் உணவகம் சென்னையிலேயே சிறந்த சுவையான உணவை தயாரித்து வழங்கும், உணவுப்பிரியர்களின் தேர்வாக பத்மம் விளங்கும் . உயர் தர உணவை ருசிக்க பத்மம் உணவகம் நிச்சயம் சிறந்த இடமாக இருக்கும்.

பத்மம் உணவகம் பற்றி..

பத்மம் உணவகம் சென்னையில் தி.நகர் மற்றும் சாலிகிராமத்தில் இயங்கும் உயர்தர சைவ உணவகங்கள். தென்னிந்தியாவின் பாரம்பரியமான சுவையுடன் நவீன காலத்துக்கேற்ப சுவைமாறாமல் தரமான உணவுகளை ருசியுடன் வழங்கும் நோக்கை கொண்டுள்ளது. உணவுப்பிரியர்களின் சுவையை நிறைவு செய்யும் வகையில் பத்மம் உணவகங்கள் தென்னிந்தியா முழுவதும் மேலும் பல கிளைகளை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here