யூ டியூபில் சிரிக்க வைக்கும் ‘பரிதாபங்கள்’ கோபி – சுதாகர் சினிமாவிலும் சிரிக்க வைக்க போட்டாச்சு பூஜை!

‘பரிதாபங்கள்’ யூ டியூப் சேனல் பிரபலங்கள் கோபி – சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி என்டர்டெயினர் திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையாக நடந்தது.
புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கவிருக்கும், இந்த படம் குறித்து கோபி – சுதாகர் பேசியபோது, ”இந்தகதையை கேட்டவுடனே இது வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக இருக்காது எனப் புரிந்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் தான் படத்திலும் இருக்கும் ஆனால் அதோடு ஃபேண்டஸி கலந்து நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் பொழுது போக்கும் இப்படத்தில் இருக்கும். யுடூயூப் வீடியோக்களில் சிரிக்க வைப்பது வேறு வகையானது ஆனால் சினிமா எனும்போது ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். பரிதாபங்களில் இருக்கும் கோபி சுதாகர் இதில் இருக்க மாட்டார்கள். ஆனால் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் நீங்களும் சில நாட்கள் இணைந்து பயணிப்பது போல் இருக்கும். ஒரு புது மாதிரியான நல்ல பொழுதுபோக்கு அனுபவமாக இப்படம் இருக்கும்” என்றனர். இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இவர்களுடன் VTV கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், வின்சு ரேச்சல் சாம், ரமேஷ் கண்ணா, Mu.ராமசாமி, முருகானந்தம்,  பிரசன்னா, கௌதம், ஹரிதா, யுவராஜ் கணேசன், டிராவிட், பிரகாஷ், ஜீவா சுப்பிரமணியம், கோதண்டம், வெங்கல் ராவ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் சென்னையை சுற்றி 40 நாட்களில் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பொது நிதியிலிருந்து இப்படம் உருவாக்கப்படுகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் தெரியவரும்.

தொழில்நுட்பக் குழு:-

இயக்கம் – விஷ்ணு விஜயன்
ஒளிப்பதிவு : சக்திவேல், K B ஶ்ரீ கார்த்திக்
இசை : JC ஜோ
எடிட்டிங் : சாம் Rdx
கலை இயக்கம் : PV முத்து மணி
உடை வடிவமைப்பு : அசார் (Adore)
பப்ளிஷிட்டி டிசைனர் : கண்ணதாசன் DKD
விஷுவல் எஃபெட்ஸ் : அரவிந்த்
நடன அமைப்பு : ரிதிக்
டிஜிட்டல் புரமோசன்ஸ் : ஆகாஷ் மாறன்
அனிமேசன் டீம் :  விஜய் , பாலாஜி சிவா
புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : UK பாலாஜி
மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)
லைன் புரடியூசர் : டிராவிட் செல்வம்
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : ஹரிஹரன் D

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here