முரளி ராம் – தேவிகா கிருஷ்ணன் நடிப்பில் புதுமையான ரொமான்டிக் க்ரைம் திரில்லர்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

‘தொப்பி’ படம் மூலம் அறியப்பட்ட முரளி ராம், தேவிகா கிருஷ்ணன் நடிக்க, அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கத்தில் புதுமையான ரொமான்டிக் க்ரைம் திரில்லர் திரைப்படம் உருவாகிறது.
முரளி ராம், தேவிகா கிருஷ்ணனுடன் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்சன் நம்பர்1’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
‘கிராமத்து பின்னணியில், மாறுபட்ட க்ரைம் திரில்லராக உருவாகும் இந்த படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமரவைக்கும் விதத்தில் புதிய அனுபவமாக இருக்கும்’ என நம்பிக்கை தருகிறார்கள் படக்குழுவினர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.
படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் ஒரே கட்டமாக நடை பெறவுள்ளது. படத்தின் மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளிவரும்.
படக்குழுவினர்: 
இயக்கம், தயாரிப்பு: ஷிவ நடராஜன்
ஒளிப்பதிவு:  பிரகாஷ்
இசை: டிரம்ஸ் சிவமணி
கலை: நந்து
எடிட்டிங்: அகமது
புகைப்படம்: சந்துரு
நடனம்: அன்வர்
சண்டை: ஓம் பிரகாஷ்
மக்கள் தொடர்பு: ஏ.ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here