கல்லூரி மாணவர்கள் 6000 பேர் முன்னிலையில் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் சர்வைவல் திரில்லர் சப்ஜெக்டில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிக்க, தனபாலன் கோவிந்தராஜ் இயக்கியிருக்கும் படம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி.’

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி இணைய வெளியில் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பை குவித்து வருகிறது.

‘மதயானைக்கூட்டம்’ என்ற இந்த பாடல் கோவை கே.பி.ஆர். இன்ஸ்டிடியூஷன் கல்லூரி வளாகத்தில் நடந்த Fessta ’23 விழாவில் 6000 மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ரெஞ்சித் உண்ணி இசையில் அவரும் ராகுல் நம்பியாரும் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை, விதாகர் எழுதியுள்ளார். படத்தை பற்றிய அறிமுகத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடல், படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.இணையம் முழுக்க வைரலாகி வரும் இப்பாடல் யூடியூப் தளத்தில் பெரும் பார்வை எண்ணிக்கைகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் படம் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், இப்போது வெளியாகியிருக்கும் முதல் பாடல் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

படம் குறித்த கூடுதல் தகவல்கள்:

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இந்த படத்தைத் தயாரிக்கிறது.

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா P.வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ‘ராட்சசன்’ வினோத் சாகர், அருள் டி சங்கர், வாதகோடங்கி வடிவேல், இ. ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும், இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனைத் தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை.

அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாகப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ளது ‘பருந்தாகுது ஊர் குருவி.’

படக் குழு:-
இசை – ரெஞ்சித் உண்ணி
ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல்
எடிட்டர்கள் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன் – நெல்சன் அந்தோணி,
சண்டைக் காட்சிகள் – ஓம் பிரகாஷ்
கலை இயக்கம் – விவேக் செல்வராஜ்
உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S சண்முகப்பிரியா
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here