புல்லர்டன் இந்தியா பசு விகாஸ் தினம்… தமிழ்நாட்டில் 10900 க்கும் அதிகமான கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை!

சென்னை, 22 பிப்ரவரி 2023: இந்தியாவின் முன்னணி NBFC-களில் ஒன்றான ஃபுல்லர்டன் இந்தியா, அதன் வருடாந்திர பசு விகாஸ் தினத்தின் (PVD) மூலம், கள கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முனைப்பு முயற்சிகளில் மிகப்பெரிய ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 61 இடங்களில் 10,900க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவச பரிசோதனை மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு கால்நடை பராமரிப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. புல்லர்டன் இந்தியா, 2023 பிப்ரவரி 4 முதல் 11 வரை மாநிலம் முழுவதும் 24 இடங்களில் கால்நடை உரிமையாளர்களுக்கு இலவச சுகாதார பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்தது, இதன் மூலம் 1800 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயனடைந்தன.

இந்த மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 71,400 க்கும் அதிகமான கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து, 15 மாநிலங்களில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய 374 இடங்களில் இந்த முகாம்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

இந்த முகாம்கள், கால்நடை மருத்துவர்களால் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, கால்நடைகளுக்கு இலவச மருந்து மற்றும் தடுப்பூசிகள் விநியோகம், கறவை மாடுகளுக்கு ஊறுதிறனை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் போன்ற சேவைகளை வழங்கியது.

புல்லர்டன் இந்தியா, 2023 பிப்ரவரி 4 முதல் 11 வரை இந்தியா முழுவதும் 245 இடங்களில் கால்நடை உரிமையாளர்களுக்கு இலவச உடல்நல பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்தது, 20,400க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

இந்த நிறுவனத்தின் தனித்துவமான முன்முயற்சியை எடுத்துரைத்து, ஃபுல்லர்டன் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. சாந்தனு மித்ரா, “புல்லர்டன் இந்தியாவில் நாங்கள் பின்தங்கிய சமூகங்கள் முழுவதும் உள்ளடங்கிய நிதி வளர்ச்சியை செயல்படுத்துகிறோம். இந்த தத்துவமானது, அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்களுக்கு உதவுவதோடு சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் உதவி, எங்கள் வாடிக்கையாளர்களுடன் எங்களை நெருக்கமாக கொண்டுவருகிறது.

எங்கள் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், கிராமப்புற சமூகங்களிடையே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களின் வருமான வழிகளை அதிகரித்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, கால்நடைகள் இன்றியமையாததாக இருப்பதால், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, சமூக மதிப்பை மேம்படுத்தும் வகையில், பெரிய அளவிலான விவசாய சமூகங்களுக்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதற்காக, ஆண்டுதோறும், பசு விகாஸ் தினத்தை நாங்கள் நடத்துகிறோம். இந்த முயற்சி, கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தி, அவர்களின் வீட்டு வருமானத்தை அதிகரித்து, நேர்மறையான சமூக தாக்கத்தை ஏற்படுத்துவதைக் கண்டுள்ளது.” என்று கூறினார்.

இந்த நிறுவனம் தனது முதல் பசுவிகாஸ் தினத்தை 2014 இல் ஒரு நாள் கால்நடை பராமரிப்பு முகாமாக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அறிமுகப்படுத்தியது, கிராமப்புற மக்களின் கால்நடைகளை பராமரிக்க உதவுவதற்காக அங்கே நிறுவன ஊழியர்கள் அவர்களுடன் இணைந்திருந்தனர்.

பல ஆண்டுகளாக, புல்லர்டன் இந்தியா, கால்நடை உரிமையாளர்களுக்கு தேவையான கால்நடை சுகாதார பராமரிப்பு வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க உதவியது, இதனால் அவர்கள் கால்நடைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், அவர்களின் வீட்டு வருமானத்தை அதிகரிக்கவும் முடியும். இந்த பசுவிகாஸ் தினத்தில் இதுவரை 2,71,000 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தது, 80,000க்கும் மேற்பட்ட கால்நடை உரிமையாளர்கள் பயனடைந்துள்ளனர்.
பசுவிகாஸ் தினத்தில் கருத்து தெரிவித்த ஃபுல்லர்டன் இந்தியா – வின் தலைமை மக்கள் அதிகாரி திரு. சுவாமிநாதன் சுப்ரமணியன்,

“இந்தியாவின் கிராமப்புற முக்கியபகுதிகளில் உள்ள பல விவசாயிகள் தங்கள் வருமானத்திற்காக கால்நடை வளர்ப்பை நம்பியிருக்கிறார்கள், மேலும் எங்களது வருடாந்திர பசுவிகாஸ் தின திட்டத்தின் மூலம், தரமான கால்நடை சுகாதாரத்திற்கான அணுகலுடன் முழுமையான சேவைகளை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் இந்த சமூகத்தை மேம்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது எங்கள் ஊழியர்களுக்கு ஒரு நல்ல நோக்கத்திற்காக மனமுவந்து சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதற்கான வாய்ப்பை வழங்கியது.” என்று கூறினார்.

2014 இல் தொடங்கப்பட்ட பிறகு, பசுவிகாஸ் தினம் 2015, 2018, 2019 மற்றும் 2023 இல் நடைபெற்றது. புல்லர்டன் இந்தியா, 2015 லிம்கா புத்தகத்தில் இந்தியா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய ஒற்றைய நாள் கால்நடை பராமரிப்பு முகாமாகவும், 2018 ஆம் ஆண்டில் பெஸ்ட் ஆஃப் இந்தியா ரெக்கார்ட்ஸ் இல் உலகின் மிகப்பெரிய ஒற்றைய நாள் கால்நடை பராமரிப்பு முகாமாகவும், மேலும் 2019 ஆம் ஆண்டில் வேர்ல்ட் புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸ் ஆல் கால்நடை பராமரிப்புக்கான மிகப்பெரிய முகாமாகவும் இடம்பெற்றது.

Fullerton Financial Holdings (FFH)
FFH is an independently operated strategic and operating investor in financial and related services in emerging markets. FFH creates shareholder value by being committed to building differentiated business models focused on the Mass Market and SME segments, and enabling digital innovation for its portfolio companies. FFH is a wholly-owned independent portfolio company of Singapore-headquartered investment company, Temasek.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here