துல்லியம், 3D காட்சிப்படுத்தல்… மூட்டு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையில் 4-ம் தலைமுறை ரோபோவை ஈடுபடுத்தும் பிரசாந்த் மருத்துவமனை!  

பிரசாந்த் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புதிய அதிநவீன கூட்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக (Joint Reconstruction) நான்காவது தலைமுறை ரோபோவை அறிமுகப்படுத்துகிறது.

இந்த துல்லியத் தன்மை மிக்க தொழில்நுட்பம் மூலம் 3D காட்சிப்படுத்தல் மற்றும் உள்ளுணர்வு கட்டுப்பாட்டு அமைப்புகள் அறிதல் ஆகிய செயற்பாடுகளை சிறப்பாக  கண்டறிந்து சிறப்பாக சிகிச்சை செய்ய முடியும். குறிப்பாக  மூட்டுவலி மற்றும் முழங்கால் மூட்டு பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு மூட்டு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்வதற்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுகிறது.

இந்த நான்காவது தலைமுறை ரோபோவை பிரசாந்த் மருத்துவமனைகளின் தலைவர்  டாக்டர் சி கீதா ஹரிப்ரியா, பிரசாந்த் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி கோபாலசாமி, பிரசாந்த் மருத்துவமனைகளின் இயக்குநர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் பத்மஸ்ரீ விருதாளரும், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் மயில்வாகனன் நடராஜன் துவக்கி வைத்தார்.பிரசாந்த் மருத்துவமனைகள் எலும்பியல் தொடர்பான சிகிச்சைகளை வலுவாக்கும் விதமாக ரோபோடிக்ஸ் கூட்டு மறுசீரமைப்பு அதிநவீன சிறப்பு மையத்தையும் இன்று திறந்து வைத்துள்ளது.  இந்த எலும்பியல் தொடர்பான சிறப்பு மையம் மூத்த எலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆறுமுகம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட எலும்பியல் நிபுணர்கள், அனுபவமிக்க சிறப்பு ஆலோசகர்கள், செவிலியர்கள்  என குழுவாக ஒருங்கிணைந்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.

வெளியீட்டு விழாவில் பேசிய பத்மஸ்ரீ விருதாளரும், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் மயில்வாகனன் நடராஜன், இந்த பொன்னான நேரத்தில்  மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சையில் வெற்றிகரமாக 4வது தலைமுறை ரோபோட்டிக்ஸை செயல்முறை படுத்தியதற்காக  பிரசாந்த் மருத்துவமனைகளின் எலும்பியல் துறை மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இதயவியல் மற்றும் மகப்பேறு ஆகிய துறைகளில் நோயாளிகளுக்கான அற்புதமான சேவை புரிவதில் பிரசாந்த் என்கிற ப்ராண்ட் யாரும் தொட முடியாத உயரத்தைக் கட்டியமைத்துள்ளது.  இன்று இந்த ரோபோடிக்ஸ் கூட்டு மறுசீரமைப்பு அதிநவீன சிறப்பு மையத்தை துவங்கியிருப்பதன் மூலம் எதிர்கால மருத்துவ சேவையில் துல்லியமான, திறமையான மற்றும் திறன்மிக்க செயல்பாடுகளை அமைப்பதற்கான செயல்பாடுகளை துவங்கி வைத்துள்ளது பிரசாந்த் குழுமம். இதன்‌ மூலம் பல ஆண்டு காலமாக வலியால் அவதிப்பட்டு வரும் மக்களின் வலியை பிரசாந்த் மருத்துவமனைகள் தீர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய பிரசாந்த் மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறும்போது, சென்னையில் முதன்முதலாக மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சைக்கான நான்காவது தலைமுறை ரோபோவை அறிமுகப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் புதிய ரோபோவை அறிமுகபடுத்துவது மற்றும் மூட்டு மறுசீரமைப்பு அதிநவீன சிறப்பு மையத்தை துவங்குவதன் மூலம் துல்லியமான மருத்துவ சேவை மற்றும் தனித்துவமான சேவையில் புதிய முத்திரை பதித்துள்ளோம். இந்த புதிய அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் எலும்பியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தவும், சிறந்த சிகிச்சை முடிவுகள் மற்றும் குணமாகும் வேகத்தை அதிகரித்தல் மூலம் பிரச்சனையோடு வரும் நோயாளிகளின்  வாழ்வை மாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த அதிநவீன தொழில்நுட்பம் சிகிச்சையளிப்பதில் துல்லியம்‌ மற்றும் திறன்மிக்க முறையில் செயல்படுவதால் மிக குறுகிய காலத்தில் வலியற்ற குணப்படுத்துதலை விரைவாக சாத்தியமாக்குகிறது.

அதிநவீன மறுசீரமைப்பு மையத்தின் முக்கியத்துவம் குறித்து பிரசாந்த் மருத்துவமனைகள், ரோபோட்டிக் மூட்டு மறுசீரமைப்பு மையத்தின் தலைவர்‌‌ மற்றும் மூத்த எலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆறுமுகம் கூறுகையில், எங்களது சிறந்த மற்றும் திறன் வாய்ந்த மருத்துவ பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் அதிநவீன மையத்தால் சென்னையில் இயங்கிவரும் மருத்துவ சேவை பிரிவுகளின் கேம் சேஞ்சராக முன்னோடியாக நாங்கள் இருப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எங்களது மையம் வாடிக்கையாளர்களுக்கு துவக்கம்‌ முதல் இறுதி வரை சிறந்த மருத்துவ சேவையை வழங்கும். எலும்பியல் துறையில் சிறந்த சிகிச்சை தரத்தை உருவாக்குதல்‌ மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களின் மூலம் திறன்மிக்க சிகிச்சைகளை நாங்கள் உறுதியாக மேற்கொள்வோம்.

மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சைக்கான 4வது தலைமுறை ரோபோட்டிக் கருவியான இது எளிமையான மற்றும் பொருந்தக்கூடிய மூட்டு மாற்று அறுவைசிகிச்சை கருவியாகும். இது அதிநவீன infra-red கேமராக்கள் மற்றும் ஆப்டிக்கல் ட்ராக்கர்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி மூட்டு பகுதியின் 3D வரைபடத்தை உருவாக்குகிறது. மேலும் நோயாளியின் உடற்கூறு குறித்த தகவல்களை துல்லியமாக சேகரிக்கிறது. இதன்மூலம் ஒவ்வொரு செயல்முறைக்கும் ஏற்ற சரியான  முடிவுகளை இது தருகிறது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவர்கள் மூட்டு சார்ந்த‌ பிரச்சனைகளை உடனடியாக கண்டறிந்து, சிகிச்சை முடிவுகளை உடனே எடுக்கவும், பாதிக்கப்பட்ட எலும்புகளை உடனடியாக அகற்றவும் உதவுகிறது. இதில் முக்கியமே இது முன்பை விட 30% மேம்பட்ட துல்லிய முடிவுகளை தருகிறது. இந்த அறுவை சிகிச்சை முறை குறைந்த வலி உடையதாகவும், பாரம்பரிய முறையை விட இரத்த இழப்பை குறைப்பதாகவும் இருக்கும். பிரசாந்த் மருத்துவமனையின் நிபுணத்துவம் பெற்ற அனுபவமிக்க மருத்துவர்களின்  சிறந்த  அறுவை சிகிச்சைக்கு பிறகு  நோயாளிகளின் குணமடைதல் விகிதமும் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here