கலைஞர் டிவி.யின் ‘ரஞ்சிதமே’ தொடரில் தீனா, ரஞ்சிதாவை கண்டுபிடிப்பாரா? எகிறும் எதிர்பார்ப்பு…

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘ரஞ்சிதமே’ புத்தம் புதிய மெகா தொடருக்கு குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தொடரில் தற்போது அருணின் அலுவலகத்தில் வேலைக்கு சேரும் ரஞ்சிதா அவளது அக்கா கணவன் தீனாவிடம் இருந்து தப்பிப்பாளா என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
இனியன் தினேஷ் இயக்கியிருக்கும் இந்த நெடுந்தொடரில், நாயகி ரஞ்சிதாவாக மனிஷாஜித்தும், மாமியாராக ரூபாஸ்ரீயும், நாயகனாக சதீஷூம், முக்கிய கதாபாத்திரங்களில் ஹரிநந்தன், ராம்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

தொடரில் ரஞ்சிதாவை சந்தித்த வேதவல்லி ரஞ்சிதாவை பற்றி புகழ, அருணுக்கு ரஞ்சிதாவின் மீதான காதல் மேலும் கூடுகிறது. பின்னர் ரஞ்சிதா இருக்குமிடம் தீனாவுக்கு தெரிய வருவதால், அருண் ரஞ்சிதாவை தனது அலுவலகத்திலேயே வேலைக்கு சேர்த்து விட, இவர்கள் இருவரிடையே நெருக்கும் மேலும் கூடுகிறது. ரஞ்சிதாவை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வரும் தீனா, ரஞ்சிதாவை கண்டுபிடிப்பாரா? அருண் – ரஞ்சிதா இடையே காதல் வளருமா? அடுத்து நடக்கப்போவது என்ன? என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here