ரோட்டரி கிளப் சமர்ப்பனுடன் இணைந்து நடத்திய முதியோர் நல மருத்துவ முகாம்… தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா!

சென்னை கே கே நகர் ரோட்டரி கிளப், முதியோர் மற்றும் மருத்துவ பராமரிப்பு நிறுவனமான சமர்ப்பனுடன் (Samarpan) கைகோர்த்து அவர்களின் அசோக் நகர் மையத்தில் மெகா சுகாதார மையம் மற்றும் முதியோர் பராமரிப்பு முகாமை நடத்தியது.

முகாமை சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா துவக்கி வைக்க, ஆர்.எம்.டி கேர் நிறுவனர் டாக்டர் ரிபப்ளிகா ஸ்ரீதர் தலைமை வகித்தார். முகாமில், சென்னை கே.கே.நகர் ரோட்டரி சங்கத் தலைவர் ரோட்டரி சுரேந்தர் ராஜ் மற்றும் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமிற்கு முதியோர், எலும்பு, மகளிர் மருத்துவம்,கண் பார்வை,பல் பரிசோதனை, பொது பரிசோதனை மற்றும் சீரற்ற ரத்த சர்க்கரை உள்ளிட்டவை அடங்கிய இலவச மருத்துவ முகாமை சிறப்பு மருத்துவ நிபுணர்களால் நடத்தப்பட்டது .முகாமின் ஒரு பகுதியாக பிசியோதெரபி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனையும் வழங்கி 125 பேருக்கும் மேல் பரிசோதனை செய்து மருத்துவத் தகவல்கள் வழங்கியிருக்கிறது.

பரிசோதனை செய்யப்பட்ட நோயாளிகள் மீண்டும் மையத்திற்குச் செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள். திரு பிரபாகர் ராஜா பல்வேறு மருத்துவ அம்சங்களை உள்ளடக்கிய சிறப்பு முதியோர் மருத்துவ பராமரிப்பு தொகுப்பை தொடங்கி வைத்தார்.  ரூ.3000/- செலவாகும் இந்த கேர் பேக்கேஜ் மக்கள் எளிதாக வாங்கும் ரூ.800/-விலையில் சலுகை வழங்கப்பட்டது .

அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3232 இசை சிகிச்சை குழுவால் மருத்துவம் அல்லாத இசை சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டு ,சிகிச்சை முடிந்து முதியோர்கள் ரசித்து, குழுவுடன் சேர்ந்து பாடினர்.

RMD கேர் குழுமத்தின் முன்முயற்சியாகவும் ,சமர்பன் குழுவினர் மற்றும் சென்னை கே கே நகர் ரோட்டரி கிளப் நடத்திய இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here