நெகட்டிவிட்டியை வைத்து, நான் லீனியர் முறையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘ரெய்டு’ பட விழாவில் நடிகர் விக்ரம் பிரபு பேச்சு

விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் திரில்லர் சப்ஜெக்டில் உருவாகியுள்ள படம் ‘ரெய்டு.’ இந்த படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாகிறது. அதையொட்டி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 3; 2023 அன்று சென்னையில் நடந்தது.

நிகழ்வில், படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் முத்தையா ‘‘ ‘கொம்பன்’, ‘மருது’ போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அதை மனதில் வைத்து ‘ரெய்டு’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் ‘டாணாக்காரன்’ நல்ல ரீச்சாகி இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படத்தைப் பற்றி பேசினேன். அவரும் நடிக்க ஒத்துக் கொண்டார். என்னுடைய தங்கச்சியின் மகன் படத்தை சின்சியராக இயக்கியுள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது” என்றார்.

இயக்குநர் கார்த்தி, ‘‘இது என்னுடைய முதல் படம். இந்த சந்தோஷத்தைக் கொடுத்த முத்தையா மாமாவுக்கு நன்றி. விக்ரம் பிரபு எனக்கு அண்ணன் போல. அந்த அன்பு கடைசி வரை இருக்கும். ஸ்ரீதிவ்யா சிரித்த முகமாகவே இருப்பார். என்னை நம்பி இந்தப் படத்திற்குள் வந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு, ‘‘நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். நான் லீனியர் முறையில் கதை நான் நல்ல கதையை எழுதியுள்ளார்கள். களைத்தான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். இந்த கதையில் கமர்ஷியல் அம்சங்களோடு எனக்காக சில விஷயங்கள் சேர்த்துள்ளார்கள். படத்திற்கான இசையை சாம் சிஎஸ் சூப்பராக கொடுத்துள்ளார்” என்றார்.

நடிகை ஸ்ரீதிவ்யா, ‘‘இந்த படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். அவர் எனக்கு ‘மருது’ படத்தில் அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் நடித்தது மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் செளந்தரராஜன், ‘‘முத்தையா அண்ணன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. ‘குட்டி புலி’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் முடியாமல் போனது. அதனால் இந்தப் படத்தின் வாய்ப்பு வந்தபோது ஒத்துக்கொண்டேன். இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் இளைஞர்களுக்கு பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் வேலு பிரபாகரன், ‘‘என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியதில் நடிகர் பிரபுவுக்கு முக்கிய பங்குண்டு. அவருடைய மகனுடன் நடித்தது மகிழ்ச்சி. இந்த நாட்டை கீழான நிலையில் இருந்து மீட்க கலைஞர்கள் முக்கியம். சாதி ஒழிப்பு, சனாதனத்தை கலை மூலம் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

நடிகை அனந்திகா, ‘‘இது எனக்கு முதல் படம். நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் செல்வா, ‘‘ ‘வலிமை’ படத்தில் ஆரம்பித்து தொடர்ந்து நான்காவது முறையாக இந்த படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்றார்.

நடிகர்கள் ரிஷி, கண்ணன் பொன்னையா, பாடலாசிரியர் மோகன் ராஜா, எடிட்டர் மணிமாறன், ஒளிப்பதிவாளர் கதிரவன், ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ், கலை இயக்குநர் வீரமணி கணேசன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here