விஷாலின் ‘ரத்னம்’ படத்தின் ஓடிடி உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹரி இப்படத்தை இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் OTT உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தின் உரிமையை விஷால் திரை பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here