பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கி, தெலுங்குத் திரையுலகில் தற்போது பிசியான நடிகராக வலம்வருகிற சமுத்திரகனியோடு இணைந்து நடிக்கும் படம் ‘ராமம் ராகவம்.’
அப்பா மகன் உறவை கதைக்களமாக கொண்ட இந்த படம் தமிழ், தெலுங்கு என மொழிகளில் தயாராகி வெளியாகவிருக்கிறது.
படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமுந்திரி சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
படத்தை பிருத்வி போலவரபு தயாரிக்க, ‘ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ்’ நிறுவனத்தின் பிரபாகர் ஆரிபாக வழங்குகிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு: பிருத்வி போலவரபு
நிர்வாகத் தயாரிப்பு: தீபி ரெட்டி மஹிபால் ரெட்டி
கதை: சிவ பிரசாத் யானல
திரைக்கதை இயக்கம்: தன்ராஜ் கொரனாணி
வசனம்: மாலி
ஒளிப்பதிவு: துர்கா பிரசாத் கொல்லி
இசை: அருண் சிலுவேறு
எடிட்டிங்: மார்த்தாண்டம் கே வெங்கடேஷ்
கலை: டெளலூரி நாராயணன்
சண்டைப் பயிற்சி: நட்ராஜ்