இயக்குநர் ஹரி யுனிவர்ஸில் எண்டர்டெயினர் காத்திருக்கிறது! -‘ரத்னம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் பேச்சு

ஹரி இயக்கத்தில், விஷால் நடித்துள்ள 3-வது படமான ‘ரத்னம்’ வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

நிகழ்வில் நடிகர் விஷால் பேசியபோது, ”’ரத்னம்’ பற்றி சொல்ல வேண்டும். ‘மார்க் ஆண்டனி’ எனக்கு புதிய கதவைத் திறந்தது, 100 கோடி வசூலால் மரியாதை கிடைத்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’க்கு பிறகு, பழைய விஷாலை பார்க்க முடியவில்லை என்று சொன்ன போது, ஹரி சார் கூட படம் பண்ணலாம் என சொன்னார்கள். நானே அவருக்கு போன் பண்ணி நான் சார் நாம் படம் பண்ணலாம் என்றேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டார். மூன்றாவது படம் எனும் போது எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அவர் சொன்ன கதை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு சர்ப்ரைஸ் இருந்தது, உடனே இதை பண்ணலாம் என்றேன். ஹரி சார் எப்போதும் ஹீரோவுக்கு முக்கியம் கொடுப்பார். அதே நேரம், அவர் ஒவ்வொரு படத்திலும், ஒரு பெண்மணியை முக்கிய பாத்திரமாக வைப்பார்.

படத்தில் சுகுமார் அட்டகாசமாக விஷுவல்ஸ் தந்துள்ளார். கனல் கண்ணன் அமைத்த காட்சி படத்தில் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். இந்த படம் ஹரி சாரின் உழைப்பு. அவர் யுனிவர்ஸில் நாங்கள் வேலை பார்த்துள்ளோம் உங்களுக்கு எண்டர்டெயினர் காத்திருக்கிறது” என்றார்.

தொடர்ந்து அவர் பேசியபோது, சமுத்திரகனி அண்ணன் ஒரு கதை சொல்லியுள்ளார், அது படமாவதற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். அரசியல்வாதிகள் அவர்கள் வேலையை சரியாக செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன்” என்றார்.

இயக்குநர் ஹரி பேசியபோது, “இது எனது 17வது படம், விஷாலுடன் மூன்றாவது படம். விஷால் தயாரிப்பாளர் கார்த்திக்கை அறிமுகப்படுத்தினார், அந்த கம்பெனியில் கார்த்திக் சுப்பராஜ் இருந்தார், ஒரு இயக்குநர் இருக்கும் கம்பெனியில் வேலை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இந்தபடம் இந்தக்கால ஆடியன்ஸுக்கு பிடிக்கும் வகையில் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும். விஷால் ஆக்ஷ‌ன் செய்வார், ஆனால் எமோஷனிலும் அசத்தியுள்ளார்.

எல்லா ஆர்டிஸ்டும் நன்றாக வேலை பார்த்துள்ளனர். சிங்கிள் ஷாட் பற்றி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரே ஷாட்டில் எட்டு சீக்குவன்ஸ், நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் செய்துள்ளனர். எனக்கு எதார்த்தம் இருக்கனும்னு ஆசைப்படுவேன், ஏன் வைத்தார் என யாரும் கேட்கக் கூடாது. அந்த எண்ணத்தில் தான் உழைத்து உருவாக்கியுள்ளோம். 3.5 கிமீ தூரத்திற்கு நான்கு இடங்களில் மாறி மாறி ஹீரோ ஹீரோயினோடு போய் ஆக்ஷ‌ன் செய்துள்ளார், இது செய்யவே முடியாது என்றார்கள்.

வெற்றிமாறன், ரஞ்சித் எல்லாம் ராவாக தருகிறார்கள். அது மாதிரி செய்ய ஆசைப்பட்டேன். விஷால் உழைத்து தந்தார். அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர். ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பார்த்து மூன்றாவது ஷாட்டில் எடுத்து முடித்த போது தான் நிம்மதியாக இருந்தது. ஆடியன்ஸை மதித்து படம் எடுத்துள்ளோம். பார்க்கும் போது உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

நடிகர் சமுத்திரகனி, நடிகர் யோகிபாபு, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவாளர் எம் சுகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், நடன இயக்குநர் தினேஷ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here