மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில், அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, ‘சாதி வெறிப் பேய்’ என்ற வித்தியாசமான ஹாரர் காமெடி சப்ஜெக்டில் உருவாகியிருக்கும் படம் ‘ரிப்பப்பரி.’
வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

டிரெய்லரை நந்தவனம் அமைப்பைச் சார்ந்த சிறார்கள் 10 பேர் இணைந்து வெளியிட்டனர்.
நிகழ்வில், மாஸ்டர் மகேந்திரன், ”இந்த பங்ஷனுக்கு வந்த பிறகுதான் நிறைய டேலண்ட் உள்ளவர்கள் படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். தொழில்நுட்க் குழுவில், அத்தனை பேரும் கடினமாக உழைத்துள்ளார்கள். நடிகை ஆரத்தி கேரளாவில் ஒரு வுமன் ஐகான். அவருக்குக் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்த படத்தில் மிக நன்றாக நடித்திருக்கிறார். இயக்குநர் அருண் கார்த்திக் மிகச்சிறந்த நண்பர். படத்தை வித்தியாசமான ரசனையில் அழகாக உருவாக்கியிருக்கிறார்” என்றார்.

நடிகை காவ்யா, ”இந்த படத்தில் பாரதி எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். மாஸ்டர் மகேந்திரன் என் நண்பர். படத்தில் ஶ்ரீனியுடன் தான் எனக்கு அதிக காட்சிகள் இருந்தது. சின்னத்திரையில் எனக்குக் கிடைத்த வரவேற்பு போலவே, பெரிய திரையிலும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் ந. அருண் கார்த்திக், ”இந்த படத்தை தயாரித்து இயக்க கதை தூண்டுதலாக இருந்தது. என்ன தான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயாரித்தாலும் உடனிருப்பவர்கள் அந்த கதையை நம்புபவர்களாக நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் இப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்குச் செல்லும் திறமை கொண்டவர்கள். அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது.
மாஸ்டர் மகேந்திரனுக்குள் சினிமா ஊறியிருக்கிறது. அவருக்கான காலம் விரைவில் வரும். அவரைத்தாண்டி ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்த படம் உங்களை மகிழ்விக்கும். ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.
நடிகர் ஶ்ரீனி, ”இந்த படத்தில் பேயாக வருவது நான்தான். அப்படி நடித்தது சவாலாக இருந்தது. நல்ல படம் செய்திருக்கிறோம். எனக்கு ஜோடியாக காவ்யா நடித்திருக்கிறார். என் சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக இந்த படத்தில் கொஞ்சமாகக் காதலிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். படம் நல்ல எண்டர்டெயினராக இருக்கும்” என்றார்.
இசையமைப்பாளர் திவாரகா தியாகராஜன், ”இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோதே இது அட்டகாசமாக இருக்குமென்று தெரிந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருந்தது. இயக்குநர் என்னிடம் நிறைய வேலை வாங்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் மிக நன்றாக நடித்துள்ளார்” என்றார்.
பாடகர் சிபி ஶ்ரீனிவாசன், இந்த படத்தில் மூன்று பாடல்கள் பாடியுள்ளேன். அதில் ஒரு பாடல் பாட்டியின் குரலில் பாடியிருக்கிறேன். அது ஒரு சந்தோஷமான ஆக்ஸிடெண்ட்” என்றார்.
நிகழ்வில் படத்தின் கதாநாயகி ஆரத்தி பொடி, நடிகர் நோபிள் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம் உட்பட பலரும் கலந்துகொண்டு பேசினார்கள்.
நிகழ்வில் மாஸ்டர் மகேந்திரன் மாஸ்க் அகற்றாமல் பேசினார். அதற்கான காரணத்தை கேட்டபோது, வெப் சீரிஸ் ஒன்றுக்கான கெட்டப்பில் இருப்பதாகவும், அதை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது என்ற கட்டாயம் என்பதாலும் மாஸ்க் அகற்றாமல் பேசுகிறேன் என்று தெரிவித்தார்.