பிரமாண்டமான பான் இந்திய படம் தயாரிக்க ‘அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்த ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண்!

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் ‘வி மெகா பிக்சர்ஸ்’ புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட நிறுவனம்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கார்த்திகேயா 2’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ‘வி மெகா பிக்சர்ஸ்’, அகில இந்திய தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதன் மூலம் புதுமையான ஒரு படைப்பை பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளனர். பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தில், இளம் நாயகன் ஒருவர் முதன்மை வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார்.

வி மெகா பிக்சர்ஸ் – அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் கூட்டணியின் முதல் திரைப்பட அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், உருவாகவிருக்கும் புதிய படம் சிறந்த உள்ளடக்கம் மற்றும் பரந்து விரிந்த வீச்சைக் கொண்ட பிரமாண்ட படைப்பாக இருக்கும் என்று தயாரிப்புக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here