மாணவ, மாணவிகள் 500 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி ‘கிங்மேக்கர்ஸ்’ டாக்டர் எஸ்.ராஜசேகர் பிறந்தநாள் கொண்டாட்டம்! நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பு!

கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் சேர்மனும், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியச் செயலாளருமான டாக்டர் எஸ்.ராஜசேகர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 500 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தலைமை தாங்கினார்.

கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வோடு டாக்டர்.எஸ்.ராஜசேகர் அவர்களின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகராஜா, மக்கள் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர், நீதியின் குரல் நிறுவனர், அச்சமில்லை சி.ஆர்.பாஸ்கரன், ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.என்.வசீகரன், நடிகர்கள் செந்தில், மன்சூர் அலிகான், தமிழ் நதி ஆதவன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டிஎஸ்ஆர். சுபாஷ், டிஎஸ்பி மார்ட்டின், மூத்த வழக்கறிஞர் தேன்மொழி, தொழிலதிபர் வெற்றிமாறன், ஜான், மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயச்சந்திரன், வழக்கறிஞர்.சிவசங்கரி ராஜசேகர் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள், நண்பர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பத்திரிகையாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here