மாமன்னன் தஞ்சை ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாறு மாபெரும் மேடை நாடகமாக வரவிருக்கிறது. தமிழ் நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சென்னை ட்ராமாஸ் நிறுவனம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை யோகஸ்ரம் டிரஸ்டின் நிறுவனர் டாக்டர் ஏ பி வைத்தீஸ்வரன் புதிதாக துவங்கி உள்ள நாடக தயாரிப்பு நிறுவனமே சென்னை ட்ராமாஸ். அதன் முதல் படைப்பாக வருகிறது ‘மும்முடிச் சோழன்‘ என்றழைக்கப்படும் மாமன்னன் தஞ்சை ராஜராஜ சோழனின் வரலாற்று நாடகம்!
நாம் கேட்ட வரை இதன் கதை என்பது மன்னராக பதவியில் தொடங்கி அரசியல், ஆன்மிகம், தற்சார்பு முறை என தலைமுறைகள் வாழ, பாதை வகுத்து தந்தவன் இராஜராஜ சோழன். அந்த மன்னன் தன் வாழ்வில் எப்படி சிவனடியாராக நிலை கொண்டார் என்பதை மிக பிரமாண்ட முறையில் அதிக பொருட்செலவில் மேடையில் அரங்கேற்றப்படும் நாடகம்தான் இந்த மும்முடி சோழன்,
‘உன்னோடு கா’ திரைப்பட இயக்குநர் தஞ்சை ஆர்.கே. மேற்குறிப்பிட்ட நாடகத்தை உருவாக்கி வசனம் எழுதியிருக்கிறார். இந்த வரலாற்று நாடகத்தை மேடையில் ஒரு சினிமாவைப் போல் அரங்கேற்ற வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்.
நாடகத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற ஆதேஷ்பாலா பேசும்போது, சமூக நாடகம் மற்றும் சினிமாவில் நடிப்பதை விட, இந்த வரலாற்று நாடகத்தில் நடிப்பது மாபெரும் சவால். இராஜேந்திர சோழன் மக்களின் மனதை விட்டு நீங்காத பாத்திரம். அந்த பாத்திரத்தில் நான் நடிப்பது பெருமிதமாக இருக்கிறது. நாடகத்தின் முன்னோட்டமாக எடுக்கப்பட்ட இராஜேந்திர சோழன் குதிரையில் வரும் சிறப்புக் காட்சிக்காக குதிரை ஏற்றம், வாள் பயிற்சி உள்ளிட்டவற்றை முறையாக கற்றுக் கொண்டு நடித்தேன். இயல் இசை நாடக மன்றத்தின் தலைவரும் நடிகருமான வாகை சந்திரசேகர் இந்த நாடகத்தில் நடிக்கும் கலைஞர்களை அழைத்துப் பாராட்டியது கலைஞர்களை உற்சாகமாக்கியது. இந்த நாடகத்தில் வரும் சிறப்புப் பாடலுக்கு திரைப்பட இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.
இந்த நாடகம் வரும் ஜூன் 10-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை பிராட்வே இராஜா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேறவிருக்கிறது.
நாடகத்தை கண்டு மகிழ்வோம். தமிழனின் நாடக கலை வளர்ச்சி கண்டு பெருமை கொள்வோம்” என்றார்.
நாடகத்தில் பங்கேற்கும் கலைஞர்கள்:-
இராஜ ராஜசோழன் – முத்துக்குமார்
பஞ்சவன் மாதேவி – சுஜாதா பாபு
கருவூரார் சித்தர் – ஏ. பி. வைத்தீஸ்வரன்
குந்தவை நாச்சியார் – ரேவதி
இராஜேந்திர சோழன் – ஆதேஷ் பாலா
முதன்மை அமைச்சர் – விவேக்சின்ராசு
சேனாதிபதி – மு.அருண் குமார்
மந்திரி – தினேஷ்
ரவிதாசன் – சிங்கராஜா
பரமேஸ்வரன் – கணேசன்
சோமன் – ரமனன்
பாஸ்கர ரவி வர்மன் – பிரபாகரன்
மேலை சாளுக்கிய மன்னன் – விஜயகுரு