உடுப்பி, கோவாவில் படப்பிடிப்பு நடத்தியது ஏன்? ‘ரேவ் பார்ட்டி’ பட இயக்குநர் விளக்கம்

ஐஸ்வர்யா கவுடா கதாநாயகியாக அறிமுகமாகும் படம் ‘ரேவ் பார்ட்டி.’

ஐஸ்வர்யா கவுடாவுடன் கிரிஷ் சித்திபாலி, ரித்திகா சக்ரவர்த்தி, ஐஸ்வர்யா கவுடா, சுச்சந்திர பிரசாத், தாரக் பொன்னப்பா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராஜு போனகானி தயாரித்து இயக்கியுள்ள இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.மைசூர், உடுப்பி, பெங்களூர், மங்களூரு போன்ற பல்வேறு இடங்களில் முழு படப்பிடிப்பும் வெறும் 35 நாட்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ‘பான் இந்தியா’ படமாக உருவாகியுள்ள ‘ரேவ் பார்ட்டி’ வரும் ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து இயக்குநர் பேசும்போது, “ஒரே கட்டமாக சுமார் 35 நாட்களில் படத்தை முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் படத்தை ஒரே கட்டமாக முடிக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக உடுப்பி, கோவா போன்ற இடங்களில் ரேவ் பார்ட்டிகள் கொண்டாடப்படுவது வழக்கம். எனவே ஒரு புதிய மற்றும் கலகலப்பான தோற்றத்தை கொடுக்க, அந்த அழகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.

இது போன்ற பார்ட்டிகள் எப்படி தொடங்குகின்றன, ரேவ் பார்ட்டிகள் என்று அழைக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகளில் யார் ஈடுபடுகிறார்கள்? மற்றும் ஒரு ரேவ் பார்ட்டி இளைஞர்களுக்கு என்ன சேதத்தை ஏற்படுத்துகிறது என்பது இந்த படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. கதைக்களம் மற்றும் திரைக்கதை இளைஞர்களுக்கு பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here