ரத்த தான முகாம், உறுப்பு தான இயக்கம்… ‘மெட்ராஸ் கோல்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப்’பின் சுதந்திர தின கொண்டாட்டம்!

மெட்ராஸ் கோல்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் (Rotary Club of Madras Gold coast) 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக  சார்பாக ரத்த தான முகாம் மற்றும் உறுப்பு தான இயக்கம் ஆகியவை கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி காலை 10 மணி அளவில் தாம்பரம் மெடிக்கல் சென்டர் (Tambaram Medical Centre) வளாகத்தில் நடந்தது.

தலைவர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் விஜயலட்சுமி ராஜேஷ், கம்யூனிட்டி சர்வீஸஸ் ஹெல்த் டைரக்டர் ஆஃபரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ரவிராமன் பேசும்போது, “இது புதிய கிளப் என்றாலும் பெரிய பெரிய புராஜெக்ட்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று 200 யூனிட் ரத்தம் சேகரிப்பதாக திட்டமிட்டு இருந்தோம் இதேபோல இந்த மாதத்தில் 25 முகாம்களை இந்த மாவட்டத்தில் நடத்த இருக்கிறோம். நிறைய யூனிட் ரத்தம் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

அடுத்த வருடம் மாவட்ட கவர்னராக பொறுப்பேற்க இருக்கும் சரவணன் பேசும்போது, “சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும், நிறைய பேருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே ரோட்டரியின் அடிப்படை. இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 120 கிளப்புகளுக்கு மேல் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சென்னையில் உள்ள கோல்டு கோஸ்ட் ரோட்டரி கிளப். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில் இன்று ரத்ததான முகாம் நடத்துகிறோம்.

அதில் நிறைய பேர் ஆர்வமாக முன்வந்து ரத்த தானம் செய்கிறார்கள். பொதுமக்களுக்கும் நம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் இதுபோல ரத்த தானம் செய்வது எவ்வளவு நன்மை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான் இந்த ரத்த தான முகாமை நடத்துகிறோம். 200 யூனிட் ரத்தம் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதனால் நிறைய பேர் பயனடைவார்கள். இந்த சமுதாயம் பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற முகாம்களை நடத்துகிறோம்” என்றார்.

தாம்பரம் கோல்டு கோஸ்ட் ரோட்டரி கிளப் தலைவர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, ‘தாம்பரம் மெடிக்கல் சென்டரில் ரத்த தான முகாமை இன்று நடத்துகின்றனர். அது மட்டுமின்றி உறுப்பு தான இயக்கமும் நடைபெறுகிறது. விருப்பப்பட்டவர்கள் முன்வந்து ரத்ததானம் செய்து வருகிறார்கள். ஆனால் உறுப்பு தானம் செய்வதற்கு சில நடைமுறைகள் உள்ளன.

அப்படி விரும்பி வந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நமது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வை முன்னெடுத்துள்ளோம்”என்றார்.

மெட்ராஸ் கோல்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் செயலாளர் விஜயலட்சுமி பேசும்போது, “இன்றைய கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் ரத்த தானம் செய்வதற்காகவும் சுமார் 25 பேர் உடல் உறுப்பு தானம் செய்வதற்காகவும் வந்திருக்கிறார்கள். ஒரு நபர் முழு உடல் தானம் செய்வதற்காகவும் முன்வந்து கையெழுத்து இட்டுள்ளார். 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மெட்ராஸ் கோல்டு கோஸ்ட் ரோட்டரி கிளப் ஆத்மா ரத்த முகாம் மற்றும் தாம்பரம் மெடிக்கல் சென்டர் இணைந்து இதை நடத்துகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here