‘எஜமான்’, ‘சிங்கார வேலன்’, ‘சின்னக் கவுண்டர்’, ‘கிழக்கு வாசல்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக அறியப்படுபவர் ஆர்.வி.உதயகுமார்.
படங்களை இயக்குவது மட்டுமின்றி தனது தனித்துவமான பாடல் வரிகளின் மூலம் பாடலாசிரியராகவும் கொண்டாடப்படுபவர்.
‘பசங்க 2′, ‘அஞ்சல’, ‘தொடரி’, ‘தேவி’ உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்தவர், தொடர்ந்து பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார்.