‘டாடா’ பட இயக்குநரின் இணை இயக்குநர் இயக்கும் ‘ரேவன்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘ரேவன்.’ நடிகர் நேத்திரனின் மகள் அஞ்சனா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் கே பாக்யராஜ், விடிவி கணேஷ், வீரா, இந்துமதி, பா.அருணாச்சலேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘டாடா’ படத்தை இயக்கி தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த கணேஷ் கே பாபு கதை திரைக்கதை எழுத, அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய, கல்யாண் கே ஜெகன் இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படப்பிடிப்பு, ஆகஸ்ட் 21;2023 அன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் துவங்கியது.

தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ் எஸ் லலித் குமார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ராக்ஃபோர்ட் முருகானந்தம், அருண் விஷ்வா, விநியோகஸ்தர் கோவை அரவிந்த் மற்றும் போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா, யாத்திசை இயக்குநர் தரணி ராஜேந்திரன், குட்நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முழு படப்பிடிப்பும் நடக்கவுள்ளது.

மாறுபட்ட களத்தில் தற்கால நவீன தலைமுறையின் கதையை சொல்லும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு நிறுவனம் – MG STUDIOS
தயாரிப்பு – ஏ பி வி மாறன், கணேஷ் கே பாபு.
கதை, திரைக்கதை – கணேஷ் கே பாபு.
இயக்கம் – கல்யாண் கே ஜெகன்
ஒளிப்பதிவு – ரவி சக்தி
இசை அமைப்பாளர் – மனு ரமீசன்
எடிட்டர் – கதிரேஷ் அழகேசன்
கலை இயக்கம் – சண்முக ராஜா
நிர்வாக தயாரிப்பு – மீனா அருணேஷ்
ஒலி வடிவமைப்பு – அருணாசலம் சிவலிங்கம்
ஸ்டன்ட் – நைஃப் நரேன்
டிசைன்ஸ் – விக்ராந்த்
ஆடை வடிவமைப்பாளர் – காயத்திரி பாலசுப்பிரமணியன்
ஸ்டில்ஸ் – குமரேசன்
சிஜி – NxGen Media
மக்கள் தொடர்பு – திருமுருகன், பரணி அழகிரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here