தேசிய விருது அங்கீகாரம்… ‘நம்பி விளைவின் வெற்றி தொடர்கிறது’ என ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ பட இயக்குநர் மாதவன் பெருமிதம்

‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ படத்திற்கு தேசிய விருது அங்கீகாரம் கிடைத்ததையடுத்து படத்தின் இயக்குநரும், கதைநாயகனுமான ஆர். மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நம்பி விளைவின் வெற்றி தொடர்கிறது!

‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ என்ற இந்தப் பயணத்தை நாங்கள் அனைவரும் தொடங்கியபோது, நாங்கள் ஒரு சாதாரணப் படத்தை எடுக்கவில்லை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தோம். உண்மையில், நாங்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செய்து கொண்டிருந்தது நம்பி நாராயணன் என்ற மனிதருக்கான மரியாதைதான்.

சர்வதேச விண்வெளிப் பந்தயத்தில் இந்தியா மற்றும் இஸ்ரோவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு மனிதர் நம்பி. டீம் ராக்கெட்ரியில் நாங்கள் அனைவரும் அவரைச் சந்தித்தபோது, மற்றப் படங்களைப் போல இது ஒரு சாதாரண படமாக இருக்கப் போவது இல்லை என்பதை உணர்ந்தோம். இந்த மனிதரின் கதையை தேசத்திற்கும், உலகிற்கும் உண்மையாக சொல்ல நினைத்தோம்.

இன்று இந்தப் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, பெருமிதம் கொள்கிறோம். இந்த தேசிய விருது ஸ்ரீ நம்பி நாராயணனின் பெருமைக்கு மற்றொரு மரியாதை. அவருடைய அசாதாரணமான கதையைச் சொல்ல நாங்கள் வெறும் கருவிகள் மட்டுமே.

எங்கள் அன்புக்குரிய நம்பி ஐயாவுக்கு இந்த அன்பையும் பாராட்டையும் வழங்கிய ஒட்டுமொத்த தேசத்திற்கும் எங்கள் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி கூறுகிறோம். இந்த விருது எங்கள் முயற்சிகளை நிரூபித்துள்ளது. மேலும், உங்கள் அன்புக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும் எப்போதும் கடமைப்பட்டவர்களாகவும் இருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here