ஆர் கே வெள்ளிமேகம் சினிமா விமர்சனம்

அது என்ன மாயமோ புரியவில்லை; தமிழ்நாட்டு மக்களுக்கு அப்படி என்னதான் வசியம் வைத்தார்களோ தெரியவில்லை. மலையாளப் படங்கள் நம்மூரில் சக்கைப்போடு போடுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், மலையாளத்தில் படங்கள் இயக்கி கலக்கிய இயக்குநர் சைனு சாவக்காடன் தமிழில் ஒரு படம் இயக்கி, அதற்கு ‘ஆர் கே வெள்ளிமேகம்‘ என தலைப்பு வைத்திருக்கிறார். பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகும் ஜூலை 12-ல் அந்த படமும் வெளியாகிறது.

சரி அதெல்லாம் இருக்கட்டும்…. படத்தோட கதைன்னு பாத்தோம்னா பேமஸான டைரக்டர் ஆர் கே. கிட்ட ரெண்டு பசங்க அவங்க எழுதிய கதைய சொல்றாங்க. அது ஒரு காதல் கதை. ஆர் கே அந்த கதையை அவர் திரில்லர் சப்ஜெக்டா மாத்துறதுக்கு ஐடியா கொடுக்குறாரு. பசங்க அவர் சொல்றபடி கதைய மாத்தி எழுதுறாங்க. அந்த வேலையெல்லாம் ஒரு பக்கம் நடக்குறப்ப, அந்த டைரக்டர் நடந்துக்கிற விதம், பேசுற பேச்செல்லாம் கொஞ்சம் கிறுக்குத்தனமா இருக்குறதால அவரு ஏதோ பேய் பிசாசோட பிடியில சிக்கியிருக்காரோன்னு டவுட் வருது. பசங்க ரெண்டு பேரும் அவரு ஏன் அப்படி நடந்துக்கிறார்னு தெரிஞ்சுக்க விரும்புறாங்க. அதுக்காக கொஞ்சமா சிஐடி வேலை பார்க்கிறாங்க. அதுல ஒருத்தன் வசமா சிக்குறான்.

அவன் மூலமா, டைரக்டரோட லைப்ல நடந்ததெல்லாம் தெரிய வருது. அதெல்லாம் செமத்தியான திரில்லர் பட சம்பவம் மாதிரி தாறுமாறா இருக்குது. அதையெல்லாம் பிளாஷ்பேக்கா காட்டுறப்போ நமக்கு பகீர்னு ஒரு ஃபீல் வருது.

அப்படி என்னதாம்யா நடந்துச்சு?

மொத்தத்தையும் சொல்லிட்டா சுவாரஸ்யம் போய்டும். இருந்தாலும் கொஞ்சமா சொல்லலாம் தப்பில்ல.

விஷயம் என்னன்னா டைரக்டரோட அப்பா, டைரக்டரோட அம்மாவை கொன்னுட்டு தூக்குல தொங்கி செத்துப் போய்டுறாரு. அதை ஆர் கே சின்ன வயசுல பாத்து மனசு ஒடஞ்சு போயிருக்காரு. அதையெல்லாம் தாண்டி சினிமா டைரக்டராகி பேரும் புகழும் சம்பாதிச்சதெல்லாம் தனிக் கதை. சரி அது இருக்கட்டும். அந்த டைரக்டர் ஆர் கே அவரோட படங்கள்ல நடிச்சு ஃபேமஸான நடிகைய தன் கன்ட்ரோல்ல வெச்சிருந்திருக்காரு. அந்த அம்மணிக்கு அது பிடிக்காம சண்டை சச்சரவெல்லாம் நடந்திருக்கு. ஒரு கட்டத்துல அந்த அம்மணிய டைரக்டரு கொன்னுட்டாராம். அதுக்காக ஜெயிலுக்கு போய்ட்டு வந்திருக்காரு. அதுலேருந்து மனுசன் எந்த நேரமும் குடிக்கிறதும், குடிக்கிறப்போ யார்கிட்டேயே பேசுறது மாதிரியும் ஒரு மாதிரி வினோதமா நடந்துக்க ஆரம்பிச்சிருக்காரு.

அந்த சந்தர்ப்பத்துலதான் அந்த ரெண்டு பசங்க அவர்கிட்டே கதை சொல்ல போயிருக்காங்க. கேக்கவே இன்ட்ரெஸ்டா இருக்குல்ல?

சரி நெஜமாவே ஆர் கே லைப்ல என்ன நடந்துச்சு. அவரு நெசமாவே கொலைகாரரா? அவரு ஏன் அப்பப்போ கிறுக்குத்தனமா நடந்துக்கிறாரு? அந்த பசங்க சொன்ன கதைய அவரு படமா எடுத்தாரா? இதுக்கெல்லாம் ஸ்கிரீன் பிளேல ஆன்சர் இருக்குது…

கதைய கேக்குறப்போ ஹீரோ அந்த ஆர் கே தான்னு புரியுதுல்ல. அந்த கேரக்டர்ல நடிச்சிருக்கிறவரும் அதை புரிஞ்சுக்கிட்டு பயம் பதற்றம்னு ஜோரா நடிச்சிருக்காரு. புழுதி பறக்குற மாதிரி ஆக்சன்லாம் கூட பண்ணிருக்காரு.

விஜய் கெளரிஷும் ரூபேஸ்வரனும் எப்படியாச்சும் நம்ம கதை ஓகே ஆகிடாதான்னு தவியா தவிக்கிற கேரக்டர்ல வர்றாங்க. பாவம் அவங்களுக்கு கதையில ஹீரோயிஸம் காட்டுறதுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதுனால நம்மால என்ன முடியுமோ அதை செய்வோம்னு அலட்டிக்காம நடிச்சிருக்காங்க.

சுப்ரமணியபுரத்துல பாத்த விசித்திரனுக்கு இந்த படத்துல முக்கியமான ரோல். புள்ளத்தாச்சியா இருக்குற பொண்டாட்டி மேல பாசம் காட்டுறதாவுட்டும், பொண்டாட்டி சாவுக்கு காரணமானவங்களை பழி வாங்குறதாவட்டும் ஆத்திரமும் ஆவேசமுமா வெறியா பாஞ்சிருக்காரு.

டைரக்டர் ஆர் கே வோட சம்சாரமா வர்ற ஆதிரா முரளி அம்சமா இருக்காங்க. அளவா நடிச்சிருக்காங்க.

நம்ம தமிழ்  சினிமாக்கள்ல காமெடி கேரக்டர்ல பாத்துப் பழகுன கொட்டாச்சி, சின்ராசுன்னு சில பேரோட ஆதேஷ் பாலாவும் குடிகாரங்களா ரெண்டு மூணு சீனுல வந்துட்டு போறாங்க. பெருசா சொல்லிக்க ஏதுமில்ல. சீனியர் ஆக்டர் வின்சென்ட் ராயெல்லாம் கூட படத்துல இருக்காரு.

விஜய் கெளரிஷ்க்கு அம்மாவா வர்றாங்க ஷர்மிளா. அவங்களுக்கு ஜோடியா வர்ற ராமச்சந்திரன்தான் இந்த படத்தோட புரொடியூசர்.

திரைக்கதைக்கு ஏத்தபடி அஜூ சாஜன்கிறவர் எழுதுன பாட்டுக்கு, சாய்பாலன்கிறவர் மியூசிக் போட்டிருக்கார். மனசுல நிக்கலேன்னாலும் கேக்க சொகமாத்தான் இருக்கு. கேமரா மேன் அவரோட வேலைய முடிஞ்சவரைக்கும் நல்லா செஞ்சிருக்காரு. கொறை  எதுவும் சொல்றதுக்கில்லை.

சைனு சேட்டனுக்கு திரில்லர் படம் எடுக்க வருது. அதை மறுக்க முடியாது. ஸ்கிரீன் பிளேக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தார்னா, வெள்ளி மேகத்தை தங்க மேகமா கொண்டாடியிருக்கலாம்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here