இந்தியாவின் முதல் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக ‘சண்டே.’ படப்பிடிப்புக்குத் தயாரான படக்குழு.

சயின்ஸ் பிக்சன் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால் இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கிறது.

ஆனால், நமது மொழியில் சயின்ஸ் பிக்சன் படங்கள் அதிகளவில் உருவாவதில்லை. அந்த குறையை போக்கும் விதத்தில், இந்தியாவில் முதல் முறையாக தமிழில் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகிறது ‘சண்டே.’

இந்த படத்தில் ஆதித்யா டிவி விக்னேஷ் ராமமூர்த்தி நாயனாக அறிமுகமாகிறார். நிவேதா, மித்ரா இருவரும் படத்தின் நாயகிகள். கஜராஜ், வின்சென்ட் அசோகன், தர்மா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சதீஷ் கீதா குமார், நந்தினி விஸ்வநாதன் இருவரும் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இயக்கவிருக்கிறார்கள்.

இந்த படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஒரே கட்டமாக ஊட்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில், திரையில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புது அனுபவமாக இப்படம் இருக்கும் என நம்பிக்கை தருகிறது படக்குழு.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு உள்ளிட்ட மற்ற தகவல்கள் விரைவில் தெரியவரும்.

தொழில்நுட்பக் குழு:-

தயாரிப்பு நிறுவனம் – Evolution entertainment
இணை தயாரிப்பு – Blueberry studios

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு – சதீஷ் கீதா குமார்

இசை – செந்தமிழ்

பாடல்கள் – கவி கார்கோ

ஸ்டன்ட் – டேஞ்ஜர் மணி

கலை – தினேஷ் மோகன்

உடைகள் – அக்‌ஷியா & விஷ்மியா

மேக்கப் – பிரின்ஸ் பிரேம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here