இந்தியத் திரையுலகில் ஈடு இணையற்ற திறமைமிக்க நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்துள்ள புத்தகம் ‘ஸ்ரீதேவி – தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்.’Sridevi The Life of a Legent புத்தகத்தை வெளியிட்டுள்ள வெஸ்ட்லாண்ட் புக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் சங்கமித்ரா பிஸ்வாஸ், ‘இந்த புத்தகத்தில் முதலில் என்னை ஈர்த்தது அதன் பின்னால் இருக்கக்கூடிய ஆராய்ச்சிதான். இந்த புத்தகம் ஸ்ரீதேவி எனும் ஐகானைப் பற்றி அவரது தனிப்பட்ட உலகத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது’ என தெரிவித்துள்ளார்.
புத்தகத்தை எழுதியுள்ள தீரஜ் குமார், ‘வெஸ்ட்லாண்ட் புக்ஸ் எனது அறிமுக புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய லிட்டரரி ஏஜெண்ட் அனிஷ் சண்டி இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். போனி கபூர் மற்றும் அவரது குடும்பம், லதா மற்றும் சஞ்சய் ராமஸ்வாமி, சூர்யகலா, மகேஷ்வரி மற்றும் கார்த்திக், ரீனா மற்றும் சந்தீப் மார்வா ஆகியோர் எனக்கு அளித்துள்ள ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் சிலரது கருத்துகள்…
‘ஸ்ரீதேவி இயற்கையின் சக்தி. தனது கலையை அவர் திரையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தார். அதேசமயம், அவர் தனிமை விரும்பியாகவும் இருந்தார். தீரஜ்குமாரை ஸ்ரீதேவி தனது குடும்பத்தில் ஒருவராகவும் கருதினார். அவர் ஒரு ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். ஸ்ரீதேவியின் அசாதாரண வாழ்க்கையை அவர் புத்தகமாக எழுதுகிறார் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
-போனி கபூர் (ஸ்ரீதேவியின் கணவர்)
இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவி குறித்தான இந்தப் புத்தகத்தில் எந்தவொரு விஷயத்தையும் விட்டுவைக்காமல் 360 டிகிரியிலான விஷயத்தை தீரஜ் கொடுத்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த பயோகிராஃபிஸை கொடுத்த வெஸ்ட்லாண்ட் இந்தப் புத்தகத்தை பப்ளிஷ் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
-அனிஷ் சண்டி, தி லேப்ரின்த் ஏஜென்சி
ஸ்ரீதேவி பற்றி…
ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் கடந்த 50 வருடங்களில் 300க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவர் பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, பல ஃபிலிம்ஃபேர் விருதுகள், மாநில அரசு விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.