எச்சிஎல், ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா இணைந்த 21-வது ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு! பெண்கள் பிரிவில் மலேசியா, ஆண்கள் பிரிவில் பாகிஸ்தான் வெற்றி!

சென்னை, பிப்ரவரி 12, 2023: உலகளாவிய முன்னணி நிறுவனமான எச்சிஎல், ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்ஆர்எஃப்ஐ) உடன் இணைந்து, சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் & டிரையத்லான் அகாடமியில் 21வது ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக இன்று அறிவித்தது.  இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழ்நாடு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை ஆதரவு அளிக்கிறது.

ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி  2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதேசமயம், பெண்கள் பிரிவில் மலேசியா மற்றும் ஹாங்காங் சீனா இடையே நடந்த இறுதிப் போட்டியில் மலேசியா 2-0 என்ற  கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்தப் போட்டியில் சீன தைபே, ஹாங்காங் சீனா, ஜப்பான், கொரியா, குவைத், மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 10 ஆசிய நாடுகளை சேர்ந்த <69> வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அனஹத் சிங் (இந்தியா, ஆசிய ஜூனியர் தரவரிசை 3 (ஜியு17), நூர் ஜமான் (பாகிஸ்தான், ஆசிய தரவரிசை 2 (பியு19), விட்னி இசபெல்லா அனக் வில்சன் (மலேசியா, ஆசிய ஜூனியர் தரவரிசை 2 (ஜியு15), டோய்ஸ் லீ யே சான் (மலேசியா, ஆசிய ஜூனியர் தரவரிசை 2 (ஜியு17) போன்ற முன்னணி வீரர்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர்.

வெற்றியாளர்களை வாழ்த்தி பேசிய எச்சிஎல் கார்ப்பரேஷன் தலைவர் சுந்தர் மகாலிங்கம் கூறுகையில், “21வது ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப்பை சொந்த மைதானத்தில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எஸ்ஆர்எஃப்ஐ உடனான எங்கள் நீண்டகால உறவை குறிக்கிறது. ஆசிய நாடுகளின் சிறந்த ஜூனியர் ஸ்குவாஷ் திறமைகளை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துவது இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்குவாஷ் சமூகத்தை உண்மையிலேயே உற்சாகப்படுத்துகிறது. மேலும் 2023 ஆம் ஆண்டை தொடங்க இது ஒரு சிறந்த வழியாகும். இந்த சாம்பியன்ஷிப் போட்டி மனித ஆற்றலை அதிகப்படுத்துவதற்கான ஊக்கியாக இருக்கும். எச்சிஎல் இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த சரியான தளத்தை வழங்கியது..”

ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்ஆர்எஃப்ஐ) பொதுச்செயலாளர் சைரஸ் போஞ்சா கூறுகையில், “இந்த ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப் உற்சாகமாக உள்ளது. மேலும் இந்திய ஸ்குவாஷ் வீரர்களின் நேர்மறையான வேக வளர்ச்சி மற்றும் செயல்திறன் உத்திகளை உருவாக்குவதற்கு தொடர்ந்து பங்களிக்கிறது. தமிழ்நாடு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் ஸ்குவாஷ் போடியம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விளையாட்டை ஆதரித்து, ஸ்குவாஷின் உலக வரைபடத்தில் இந்தியாவை உயர்த்த உதவியதற்காக எச்சிஎல் நிறுவனத்துக்கு மிகப்பெரிய நன்றி. இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் தனிச்சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் வரும் காலங்களில் இந்த போட்டியின் நிலையை உயர்த்துவார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் நீங்கள் மிகவும் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன். மைதானத்தில் உங்கள் திறமையும் அர்ப்பணிப்பும் நீங்கள் விளையாட்டில் சிறந்த வாழ்க்கையை பெறுவதை உறுதி செய்யும்..”

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க ஆண்டான 1983 முதல் சிங்கப்பூரில் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், இந்தியா தொடர்ந்து வலுவாக செயல்பட்டு வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் எப்போதும், முதல் நான்கு அணிகளில் இடம்பிடித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு இலங்கையின் ரத்மலானாவில் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற போது, சிறுவர்களுக்கான அணி சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதல் தரவரிசையை பிடித்தது. அதன்பிறகு 2017 ஆம் ஆண்டிலும் (ஹாங்காங்) வென்றது. மறுபுறம், 2013 இல் (சியோல், கொரியா) முதல் முறையாக இந்திய பெண்கள் அணி சாம்பியன்ஷிப்பில் முதல் தரவரிசையை பிடித்தது.

எச்சிஎல் ஸ்குவாஷ் போடியம் திட்டத்தின் ஒரு பகுதியாக பிஎஸ்ஏ டூர்ஸ், உயர் செயல்திறன் முகாம்கள், நடுவர் கிளினிக்குகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்கள் மற்றும் பிற போட்டிகள் போன்ற முன்முயற்சிகளுடன் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஸ்குவாஷை, எச்சிஎல் ஆதரித்து வருகிறது.

About HCL

Founded in 1976 as one of India’s original IT garage start-ups, HCL is a pioneer of modern computing with many firsts to its credit, including the introduction of the 8-bit microprocessor-based computer in 1978 well before its global peers. Today, the HCL enterprise has a presence across varied sectors that include technology, healthcare and talent management solutions and comprises three companies – HCL Infosystems, HCL Technologies and HCL Healthcare. The enterprise generates annual revenues of over US$12.3 billion with more than 222,270 employees operating across 60 countries. For further information, visit www.hcl.com

About SRFI 

The Squash Rackets Federation of India (SRFI) was formed to oversee the promotion and development of the sport in India. The SRFI has more than 20 state associations and affiliated units with its headquarters in Chennai. The federation is affiliated to World Squash Federation/Asian Squash Federation & recognized by Government. of India. SRFI has been forging ahead with dynamic plans ensuring promotion, development, and performance of the sport at all levels.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here