லக்‌ஷ்மி மேனனோடு இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் ‘சப்தம்’ படக்குழு!

இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லர் சப்ஜெக்டில் ‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிக்கும் சப்தம்’ படத்தின் முதற் கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்டபடி நிறைவடைந்தது.
விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. அதில், படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள லக்‌ஷ்மி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன!நடிகை லக்‌ஷ்மி மேனன் இந்த படத்தில் இணைந்தது குறித்த அறிவிப்பை போஸ்டராக படக்குழு  வெளியிட, ரசிகர்கள் உற்சாகத்துடன் அதை பகிர்ந்து வருகின்றனர்.

திரில்லர் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் அறிவழகன். இப்படத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படத்திற்கு இசையமைத்த தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here