பாலியல் வன்முறைக்கெதிராக, மகளிர் தின வெளியீடாக சி. சத்யாவின் உருவாக்கத்தில் விழிப்புணர்வுப் பாடல்! மகள்களை பாடவைத்து அசத்தல்!

திரைப்படங்களில் கதைக்களத்துக்கேற்ப பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கி கவனம் ஈர்த்து வருகிறவர் சி.சத்யா.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘பெண்ணே பெண்ணே’ என்ற தனியிசைப் பாடலை உருவாக்கியுள்ளார். பாடலை அவருடைய மகள்கள் சினேகா, வைமு இருவரும் பாடியுள்ளனர். பாடல் ஆழமான அர்த்தத்துடன் கூடிய வரிகளைக் கொண்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளைப் பற்றி பேசுகிறது.

பாடலாசிரியர் தோழன் எழுதியுள்ள இந்த பாடலை பிரபாகர் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த பாடல் குறித்து இசையமைப்பாளர் சத்யா பேசும்போது, “இது மகளிர் தினத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல். பொதுவாக, பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை போற்றுவது பற்றி இந்த சமூகம் அடிக்கடி பேசுகிறது. ஆனால், அனைத்தும் வாய்மொழியாக மட்டுமே இருக்கிறது. உண்மையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் அன்றாடம் பல்வேறு துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். எனவே, பாடல் வரிகள் அது குறித்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அது மட்டுமல்லாது அதற்கு நேர்மாறாக, இசையில் ஒரு லைவ்லி பாப் ஆல்பம் உணர்வு இருக்கும். பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பாடலின் நோக்கம்” என்றார்.

தொழில்நுட்பக் குழு:
இணை ஒளிப்பதிவாளர்கள்: ஜெகன் ராஜ் & மணிபாரதி படத்தொகுப்பு: ஆதித்யா கிருஷ்ணமூர்த்தி
DI: வீர ராகவன்
ஒப்பனை: EVA
VFX: யோகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here