இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ கலகலப்பான பிரேக் அப் பாடல் மார்ச் 21 முதல் ‘சோனி மியூசிக்’கில்!

‘பிரேக் அப்’ என்றாலே சோகப்பாடல் தான் என்பதை மாற்றி கலகலப்பூட்டும் விதத்தில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், தரண் குமார் இசையில் உருவாகியுள்ளது ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ என்கிற பாடல். பாடல் வரிகளை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். முகேன் ராவ், தேஜு அஷ்வினி முன்னணி பாத்திரங்களாக தோன்றும் இந்த பாடலில் இமான் அண்ணாச்சி, தீபா மற்றும் பிராங்க்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆல்பம் வரும் மார்ச் 21-ம் தேதி சோனி மியூசிக்கில் வெளியாகிறது.

அஷ்வின் மற்றும் லாஸ்லியா நடிப்பில் பலரது இதயங்களை வென்ற ‘பேபி நீ சுகர்’ ஆல்பத்தின் வெற்றிக்கு பிறகு எஸ் ஜி சி மீடியா & என்டர்டெயின்மென்ட் மற்றும் மகேஷ் ராம் கே ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ ஆல்பத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். மகத் நடித்த ‘இவன் தான் உத்தமன்’ திரைப்படத்தையும் மகேஷ் ராம் கே இயக்கியுள்ளார்.இந்த பாடல் குறித்து இயக்குநர் மகேஷ் ராம் பேசும்போது “இந்த ஆல்பம் பிரேக் அப் என்றால் மனம் உடைய தேவையில்லை என்பதையும், அதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கலகலப்பாக சொல்லும் விதமாக உருவாகியுள்ளது. காதல் ஆல்பத்தில் பொதுவாக நாயகன், நாயகி மட்டும் தான் இடம் பெறுவார்கள். ஆனால், இதில் முகேன் ராவ், தேஜு அஷ்வினி தவிர இமான் அண்ணாச்சி, தீபா, பிராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோருக்கும் முக்கிய இடமுண்டு. தயாரிப்பில் எந்த சமரசமும் இல்லாமல் ஒரு திரைப்படத்தை போன்று ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ அமைந்துள்ளது. அனைவரும் ரசிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.இந்த ஆல்பத்திற்காக மிகவும் திறமை வாய்ந்த குழுவினருடன் மகேஷ் ராம் கைகோர்த்துள்ளார். அதன் விவரம்:

ஒளிப்பதிவு – ‘கோப்ரா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன்
படத்தொகுப்பு – ஆர்.சி. பிரணவ்
கிரியேட்டிவ் புரொடியூசர் – ரூபிணி.எஸ்
கான்செப்ட் & நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன்
கலை இயக்கம் – கார்த்திக்
ஆடை வடிவமைப்பு – பூர்த்தி பிரவீன்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here