சின்னா வெங்கடேஷ் என்பவர் ரொமாண்டிக் திரில்லர் சப்ஜெக்டில் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சங்கர்ஷனா.’சைதன்யா கதாநாயகனாகவும், ரஷீதா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில் சிவா, ஹரி, மது, பிரேம், எக்ஸ்பிரஸ் ஹரி ஆகியோர் நடித்துள்ளனர். ஆதித்யா ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். ‘மஹிந்திரா பிக்சர்ஸ்’ ஸ்ரீனிவாச ராவ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ளார்.விரைவில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் இயக்குநரிடம் பேசியபோது, ”இது முழுக்க முழுக்க பெண்களுக்கான படம். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எப்படியான வாழ்க்கையை வாழ்கிறார்கள், சமூகத்தில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். அதனால் தான் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ளோம். பட வெளியீட்டுக்கான நிறைவுப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை வெளியிட இருக்கிறோம்” என்றார்.
Home Uncategorized பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்திய ரொமாண்டிக் திரில்லராக ‘சங்கர்ஷனா.’ விரைவில் ரிலீஸ்!