அஜய் பூபதி இயக்கிய ‘RX 100’ டோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் பெரியளவிலான வரவேற்பை பெற்ற படம். அவரது இயக்கத்தில் அடுத்ததாக ‘செவ்வாய்கிழமை’என்ற படம் உருவாகிறது. இந்த படத்துக்காக தனது லக்கி சார்ம் நடிகையும் ‘RX 100’ படத்தின் மூலம் புகழ் பெற்றவருமான பாயல் ராஜ்புத்துடன் மீண்டும் இணைந்துள்ளார் அஜய் பூபதி. இந்த படத்திலிருந்து ‘ஷைலஜா’ என அவரது கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் கதாநாயகியின் தோரணையும் அவரது கண்களின் உணர்ச்சியும், விரலில் இருக்கும் பட்டாம்பூச்சியும் போஸ்டரை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது.
இந்த படத்தின் மூலம் சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் இவர்களுடன் இணைந்து அஜய் பூபதி தயாரிப்பாளராகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.
படத்தின் போஸ்டர் குறித்து இயக்குநர் அஜய் பூபதி“இந்த படம் 90களில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்ஷன் திரில்லர். பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும். பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத புதிய வகை ஜானரில் இந்த படம் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது” என்றார்.
தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் இருவரும் படம் குறித்து பேசும்போது, “‘RX 100’ படத்தின் சிந்து கதாபாத்திரம் போல, ‘செவ்வாய்கிழமை’ ஷைலஜா பாத்திரமும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் நினைவில் இருக்கும். 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படத்தை உயர் தொழில்நுட்ப தரத்தில் உருவாக்குகிறோம். படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பை அடுத்த மாதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதை அற்புதமாக உள்ளது. அது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ‘கந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்” என்றார்கள்.
படக்குழுவினர்:-
கதை, திரைக்கதை, இயக்கம்: அஜய் பூபதி
இசையமைப்பாளர்: பி அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவாளர்: தாசரதி சிவேந்திரா
நிர்வாக தயாரிப்பாளர்: சாய்குமார் யாதவில்லி
கலை இயக்குநர்: ரகு குல்கர்னி
ஒலி வடிவமைப்பாளர் & ஆடியோகிராபி: ராஜா கிருஷ்ணன்