உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் துவக்கம்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’, தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், ‘சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் உருவாகிறது. ‘காட் ப்ளஸ் என்டர்டெய்ன்மென்ட்’ இணைந்து தயாரிக்கிறது. கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.இந்த படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தற்காலிகமாக #SK21 என தலைப்பிடப்பட்டு சிவகார்த்திகேயனின் 21-வது படமாக பல்வேறு கலாச்சாரங்களுக்கு மத்தியில் நம் தேசத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றைப் பேசும் படமாக உருவாகிறது. ‘படம் அதிரடி ஆக்‌ஷன்களுடன் புதுமையான கதைக் களத்தில் ரசிகர்களுக்கு ஒரு நிறைவான அனுபவமாக இருக்கும்’ என நம்பிக்கை தருகிறது படக்குழு.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குநர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டெஃபன் ரிக்டர் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

காஷ்மீரில் தொடர்ந்து 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி படப்பிடிப்பு உலகநாயகன் கமல்ஹாசன், தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், இணை தயாரிப்பாளர் வக்கீல் கான், பொது மேலாளர் மற்றும் தலைவர் லாடா குருதேன் சிங், மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் தலைமை செயல் அதிகாரி நாராயணன் ஆகியோர் கலந்துகொள்ள பிரமாண்டமான விழாவுடன் தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here