நடிகை ஸ்ரீ கௌரி பிரியாவுக்கு ’மாடர்ன் லவ் சென்னை’ மூலம் கிடைத்த வரவேற்பு! இனி தமிழ்ப் படங்களில் பிஸி!

’தி மிஸ் ஹைதராபாத் 2018’ என்ற பட்டம் வென்றவர் ஸ்ரீ கௌரி பிரியா. இளம் நடிகையான இவர் அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஒரிஜினல் தொடரான ’மாடர்ன் லவ் சென்னை’யில் ‘ஷோபா’ என்ற கதாபாத்திரத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பல தரப்பிலும் கவனம் ஈர்த்துள்ளார். ராஜு முருகனால் தழுவி, எழுதி, இயக்கப்பட்ட முதல் அத்தியாயம் ‘லால்குண்டா பொம்மைகள்’. இதில் மென்மையான இதயம் கொண்ட டாம்போயிஷ் பெண்ணாக அவர் நடித்துள்ளார். இவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. சென்னைப் பெண்ணின் பாத்திரத்தில் ஸ்ரீ கௌரி பிரியாவின் சரியான தோற்றம், தன்னிச்சையான மற்றும் இயல்பான நடிப்பு போன்றவை பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. கண்கள் வழியே வெளிப்படுத்தும் நடிப்பு, சாமர்த்தியம் மற்றும் வசீகரிக்கும் தோற்றம் என அவரது நடிப்புத் திறமையை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

‘ரைட்டர் பத்மபூஷன்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக சிறந்த விமர்சனங்களைப் பெற்ற இவர், இப்போது தென்னிந்தியாவில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியுள்ளார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவுள்ளார். அந்த படங்கள் குறித்து விரைவில் தகவல்கள் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here