மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் ‘சரக்கு.’ இந்த படத்தில் மன்சூர் அலிகான் சாராயத்திற்கு எதிராக அம்மன் பாடலொன்றை எழுதி இசையமைத்துள்ளார். சாராயத்திற்கு எதிராக தாலி பிச்சை கேட்டு, பெண்கள் அம்மனிடம் பாடுவதுபோன்ற அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் பக்தி பரவசத்துடன் நடனம் அமைக்க பாடல் காட்சி சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்டது. படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த பெண்கள் ஆவேசமாக சாமியாடினார்கள்.
‘சரக்கு’ படத்தில் மன்சூர் அலிகானுக்கு ஜோடியாக வலினா நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.
படக்குழு:
இயக்கம்: ஜே.ஜெயக்குமார்
இசை: சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்
மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்